தமிழக சிறையில் இடமில்லையா?தமிழக அரசின் மனதில் இடமில்லையா? - பாஜக

 
go


விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி என்று கூறிக்கொள்ளும் ஒரு நபர் தனது டுவிட்டர் பக்கத்தில் என்னை வீடு தேடி வந்து வாசலில் வைத்து விடுவேன் என்று தகவல் பதிவிட்டிருக்கிறார்.  அவர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று ஆதாரத்துடன் புகார் மனுவை அளித்திருந்தார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் .

கடந்த இருபத்தி ஏழாம் தேதி அன்று புகார் மனு அளித்து விட்டு வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜகவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் பற்றி தரம்தாழ்ந்த கருத்துக்களை சிலர் சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.  அது குறித்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.

n

 கடந்த இருபத்தி ஏழாம் தேதி அன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நாராயணன் திருப்பதி அளித்திருந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால்,    ‘’எட்டு நாட்களாகியும் என்னை  'வீடு புகுந்து வெட்டுவோம்' என்று கொலை மிரட்டல் விடுத்தவர மீது நடவடிக்கை இல்லை. ஏன்? ஆதாரத்தோடு புகாரளித்தும் கைது செய்யாதது ஏன்? தமிழக  சிறையில் இடமில்லையா?தமிழக அரசின் மனதில் இடமில்லையா?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்.