திட்டமிட்டபடி பிரதமர் வருகிறாரா? தமிழக அரசின் முடிவு என்ன?

 
ச்ம்

பஞ்சாப்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் சென்ற போது திடீரென்று சாலையை மறித்து நின்று விவசாயிகளால் பிரதமரின் பாதுகாப்பு குறித்த கேள்வி எழுந்து பரபரப்பானது.   பிரதமருக்கு ஏற்பட்ட இந்த பாதுகாப்பு குளறுபடி நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கின்றன.

 பஞ்சாப் சம்பவத்திற்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக பயணம் ரத்து செய்யப்பட இருக்கிறதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.   வரும் 12ம் தேதி தமிழகம் வருவதாக  அறிவிக்கப்பட்டிருந்தது.

 மதுரையில் பாஜக சார்பில் நடைபெறும் மோடி பொங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு பின்னர் விருதுநகர் சென்று 11 மருத்துவ கல்லூரிகளை திறந்து வைப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ம்ச்

 இந்த நிலையில் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.   தமிழக அரசு கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து இருக்கும் நிலையில் அதை கவனத்தில் கொண்டு மோடியை பொங்கல் நிகழ்ச்சியை ஒத்தி வைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை.

ஒமிக்ரான் பரவல் காரணமாக தற்போது நடத்த வேண்டாம் என்று முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

 அதேநேரம் திண்டுக்கல், விருதுநகர், ராமநாதபுரம் , நீலகிரி, நாமக்கல் , கிருஷ்ணகிரி, திருப்பூர் , நாகை , திருவள்ளூர் , கள்ளக்குறிச்சி,  அரியலூர் உள்ளிட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 மருத்துவ கல்லூரிகளின் திறப்பு விழா ஜனவரி 12 அன்று நடைபெற இருந்தது.  இந்த கல்லூரிகளை திறந்து வைக்க மோடி வருவாரா என்ற கேள்வி எழுந்தபோது இது தமிழக அரசு சார்பில் நடக்கும் நிகழ்வு.   இதில் மோடி பங்கேற்கிறாரா இல்லையா என்பது குறித்து, தமிழக அரசு முடிவெடுத்து தமிழக அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை .