பிடிஆர் தனிமனிதரா? நிதி அமைச்சரா? கன்பியூஸ் ஆன டி.ஆர்.பாலு

 
tr tr

 திமுகவின் தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் -டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.  ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,  பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.  

pt

இந்த நிலையில் திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பெட்ரோல்,  டீசல் விலையை ஏன் குறைக்கவில்லை என்ற கேள்விக்கு,  மத்திய அரசு ஏன் இன்னும் பெட்ரோல்- டீசல் விலையை ஜிஎஸ்டி கொண்டு வரவில்லை? என்று எதிர்க் கேள்வி கேட்கிறார் திமுக பொருளாளர் டி. ஆர். பாலு.

 உங்கள் நிதியமைச்சர்தானே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் என்று சொல்ல,  அவர் சொல்கிறார் என்பதற்காக எல்லாம் சொல்லக்கூடாது.  பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு ஏன் ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவில்லை ?என்று மீண்டும் கேட்க ,  பெட்ரோல்-டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்பிற்குள் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடா? என்ற கேள்விக்கு,   இதைத்தான் திமுக தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கிறது என்று சொல்ல,  அப்புறம் ஏன் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் எதிர்க்கிறார் என்று கேட்க,   நிதியமைச்சரா..? ஒரு தனி மனிதர் பேசுவதை பற்றி எல்லாம் பேசுறீங்களே என்று சொல்ல, சார், அவர் தனி மனிதர் அல்ல.  அவர் தமிழ்நாட்டோட நிதியமைச்சர்.  அவர்தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கும் போகிறார் என்று சொல்ல,  அதற்கு நேரடியாக பதில் எதுவும் சொல்ல முடியாத டி ஆர் பாலு,   திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவின் தலைவர் நான் தான்.   கட்சி தலைவர் மு .க. ஸ்டாலின் சொல்லித்தான் அந்த வாக்குறுதிகள் எல்லாம் எழுதினேன் என்று மழுப்பி இருக்கிறார்.\

st

 தந்தி தொலைக்காட்சிக்கு டிஆர்பாலு அளித்துள்ள இந்த பேட்டி திமுகவினர் இடையே சலசலப்பையும் மக்களிடையே பெரும் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என்பதுதான் திமுகவின் தேர்தல் அறிக்கை,  தற்போது திமுகவின் நிலைப்பாடும் அதுதான் என்றால் நிதி அமைச்சர் ஏன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்? அப்படி என்றால் தலைமையை மீறி அவர் செயல்படுகிறாரா?என்ற கேள்வி எழுந்திருக்கிறது.  அதேநேரம் நிதியமைச்சரை  டிஆர் பாலு ஏன் தனிமனிதர் என்று கூறுகிறார்?  நிதியமைச்சர்  சொல்வதற்கு நேரடியாக விளக்கம் சொல்லாமல்,  அவரை தனி மனிதர் என்று சொல்லி டி ஆர் பாலு தப்பித்துக்கொள்ள பார்க்கிறாரா என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றார்கள்.