அவனெல்லாம் ஒரு தலைவனா? அவனைப் பற்றி எல்லாம் கேட்கலாமா? அமைச்சர் காந்தி ஆவேசம்

 
g

அவனெல்லாம் ஒரு தலைவனா? அவனைப் பற்றி எல்லாம் கேட்கலாமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஒருமையில் தாளித்து எடுத்தார் அமைச்சர் காந்தி.

திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் இல்லை என்று அண்ணாமலையும் பாஜக நிர்வாகிகளும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.  கிஷோர் கே. சாமி, கல்யாணராமன் போன்ற பாஜகவினர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து பாஜக ஆதரவாளர் மாரிதாசை குண்டர் சட்டத்தில் அடைக்க முயற்சிகள் நடந்து வருவதை அறிந்து , தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்து முறையிட்டுள்ளார் அண்ணாமலை.

அ

இந்த விவகாரத்தில்,   பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு.  திமுக ஆட்சியில் கருத்துச் சுதந்திரம் இல்லை என்று கொந்தளித்து வருகிறார் அண்ணாமலை.  

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழர் அகதி முகாமில் அரசு சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  இந்த நிகழ்வில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

 அப்போது செய்தியாளர்கள் அவரிடம் அண்ணாமலையிம் குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பினர்.  அதற்கு ஆவேசமான காந்தி,   அவன் எல்லாம் ஒரு தலைவனா அவனைப் பற்றி கேட்கலாமா?  வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிறான்.  படித்தவனைப் போல பேச வேண்டாம்.  பதவி என்பது சில காலம் தான்.  மத்தியில் ஆட்சியில் இருப்பதால் தைரியமாக பேசி வருகிறான்... என்று அண்ணாமலையை ஒருமையில் தாளித்து எடுத்தார்.