ஸ்டாலின் உத்தரவை மீறிய துரைமுருகன் மீது வழக்கு பாய்கிறதா?

 
ச்ட்

முதல்வர் ஸ்டாலின் உத்தரவை மீறிய மூத்த அமைச்சர் துரைமுருகன் மீது வழக்கு பாய்கிறது என்ற பரபரப்பு இருந்திருக்கிறது.

கொரோனா தொற்று, ஒமைக்ரான் பரவலைத் கட்டுப்படுத்த வாரநாட்களில் இரவு ஊரடங்கும்,  வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல் படுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்.   

 இந்தநிலையில் முழு ஊரடங்கு நாளில் மூத்த அமைச்சர் துரைமுருகனே கட்சியினரை சந்தித்து ஊரடங்கு விதிகளை மீறி இருப்பதால் பெரும் சலசலப்பு எழுந்திருக்கிறது.

டு

 கடந்த ஞாயிற்றுக்கிழமை 9ஆம் தேதியன்று முழு ஊரடங்கு நாளில் வேலூர் மாவட்ட திமுகவினர் மற்றும் பல்வேறு கட்சிகளில் இருந்து திமுகவில் இணைந்தவர்களும் காட்பாடியில் உள்ள துரைமுருகன் வீட்டின் முன்பாக கூட்டமாகக் கூடி நின்றனர்.   ஆளுங்கட்சியினர் என்பதால் ஊரடங்கு காலம் என்பதை அவர்கள்  காற்றி பறக்கவிட்டு நின்றிருந்தனர்.  

மூத்த அமைச்சர் துரைமுருகனும் ஊரடங்கு காலம் என்பதை மறந்து வீட்டின் முன்பாக கூடியிருந்த பல்வேறு கட்சிப் பிரமுகர்களை வழக்கம் போல் சந்தித்தார்.  இந்த சந்திப்பு குறித்த புகைப்படங்களும்,  வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியானது கண்டு கொதித்தெழுந்தனர் நெட்டிசன்கள்.  பொதுமக்களுக்கு ஒரு சட்டம் ஆளும் கட்சியினருக்கு ஒரு சட்டமா என்று கொதித்தெழுந்தனர்.  

 ஊரடங்கு விதிகளை மீறியதால் துரைமுருகன் மீது தொற்று நோய் பரவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுமா என்று கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

முகக்கவசம் அணியாதவர்களுக்கு   அபராதம் போடும் போலீசார்,   முழு ஊரடங்கில் வாகனத்தில் செல்பவர்களுக்கு அபராதம் போடும் போலீசார்  தமிழகத்தின் மூத்த அமைச்சர் துரைமுருகன் என்பதற்காக கரிசனம் காட்டுமா அல்லது வழக்கு பதிவு செய்யுமா என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர் வேலூர் மாவட்ட அதிமுகவினரும்,  நெட்டிசன்கள்களும்.