இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைத்திருக்கும் தகவல்.. பஞ்சாப் சம்பவத்தில் பரபரப்பு

 
mm

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஐந்தாம் தேதி அன்று  பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் நடைபெறுவதாக இருந்த கூட்டத்தில் பங்கேற்க சென்றார்.  வானிலை சரியாக இல்லாததால் அவர் தரைவழியாக செல்வது என்று பயணம் மாற்றப்பட்டது.   பிரதமர் மோடியின் வாகனம் ஹூசைனி வாலாவிருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் சென்று கொண்டிருந்தபோது, அந்த வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடி செல்லும் வாகனம் சுமார் 20 நிமிடங்கள் சாலையிலேயே நகர முடியாமல் நின்றது. இதனையடுத்து பஞ்சாப் நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டு பிரதமர் மீ்ண்டும் டெல்லி திரும்பினார்.

இந்த சம்பவம் பிரதமரின் உயிருக்கு ஏற்பட்ட ஆபத்து என்று பெரும்  சர்ச்சை எழுந்திருக்கிறது.

 நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் மாநில அரசு 3 பேர் கொண்ட குழுவை அமைத்து இருக்கிறது.   ஆனாலும் மத்திய உள்துறை அமைச்சகம் பஞ்சப் டிஜிபி சித்தார்த் சட்டோபாத்யாயாவுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது.   சிறப்பு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் டிஜிபிக்கு விதிக்கப்பட்ட சட்டபூர்வ கடமைகளை நீங்கள் மீறி இருக்கிறார்கள் என்பதற்கு முதல் கட்ட முகாந்திரம் தெளிவாக தெரிகிறது.  

t

 இந்த நிலையில் உங்கள் மீது அகில இந்திய சேவை சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.   இதற்கான பதிலை ஜனவரி எட்டாம் தேதி (இன்று)மாலை 5 மணிக்குள் உள்துறை அமைச்சகத்திற்கு நீங்கள் அனுப்ப வேண்டும்.    இல்லை என்றால் நீங்கள் எந்த பதிலையும் கூறவில்லை என்று கருதி உங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனவரி 6ஆம் தேதி உள்துறையின் துணைச்செயலாளர் அர்ச்சனா வர்மா நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார்.

 இந்த நோட்டீஸ் பதிண்டா எஸ். எஸ். பி., பெரோஸ்பூர் எஸ். எஸ். பி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.  அவர்களுக்கான நோட்டீசில்,    பிரதமரின் வாகனத்திற்கு 100 மீட்டர் முன்பு போராட்டக்காரர்கள் திரண்டிருக்கிறார்கள்.   இதனால் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பிரதமரின் கால்வாய் ஸ்தம்பித்து நின்றிருக்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டிய மிகக்கொடுமையான பாதுகாப்பு விதிமுறை .  இதுவரை எங்களுக்கு கிடைத்திருக்கும் தகவலின்படி அந்தப் போராட்டத்தில் பஞ்சாப் போலீசார் செயலற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்.  பிரதமரின் வழித்தடம் முழுவதும் மிகக்குறைவான போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என்று உள்துறை துணைச்செயலாளர் குறிப்பிட்டிருக்கிறார்.