’ எடப்பாடி பற்றி அறைக்குள் பேசியது எப்படி வெளியே வந்தது? இதுவும் ஒரு பெகாசஸ் ஒட்டுகேட்புதான்’’

 
op

அன்று அதிமுக மா.செ.க்கள் கூட்டத்தில் நடந்த களேபரத்திற்கு அன்வர்ராஜாவும் ஒரு காரணமாக அமைந்திருக்கிறார்.  

புதுக்கோட்டையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவருடன் அன்வர்ராஜா போனில் பேசிய ஆடியோ ஒன்று கடந்த 3 வாரங்களுக்கு முன்பு வெளியாகி கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.   எடப்பாடி பழனிச்சாமி பற்றி அந்த ஆடியோவில் ஒருமையில் பேசியிருந்தார் அன்வர்ராஜா. 

aw

அன்வர் ராஜாவின் ஆடியோவால் அதிமுகவிற்குள் சலசலப்புகள் ஏற்பட்டு இருந்த நிலையில்,  கடந்த 24 ஆம் தேதி அன்று எம்ஜிஆர் மாளிகையில் நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அன்வர்ராஜாவை  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அடிக்க பாய்ந்ததாக தகவல் வெளியானது.

 அன்வர்ராஜா எழுந்து பேச முற்பட்டபோது முன்னாள் முதல்வரை ஒருமையில் பேசிய அன்வர்ராஜா கூட்டத்தில் பேச கூடாது ஏன் பங்கேற்கவே கூடாது என்று சிவி சண்முகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து,    நான் பேசியது யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று கூட்டத்தில் தெரிவித்துள்ளார் அன்வர்ராஜா.   அதுமட்டுமல்லாமல் எடப்பாடி பழனிச்சாமியிடம்  இது குறித்து தனியாக பேசி விளக்கம் அளித்து விட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார்.

 எடப்பாடி பழனிச்சாமி பற்றி ஒரு அறையில் இருந்து பேசியதை பதிவு செய்து அதை வெளியே கொண்டு வந்துவிட்டார்கள்.   இந்த ஆடியோ எப்படி வெளியே வந்தது என்று எனக்குத் தெரியாது.   இது துரோகம்.   பெகாசஸ்ஒட்டுக்கேட்பு சம்பவம் போலத்தான் இதுவும் என்று கொந்தளித்துள்ளார் அன்வர்ராஜா.