காலி நாற்காலிகளுக்கு பஞ்சாப் முதலமைச்சர் எப்படி பொறுப்பேற்க முடியும்? ஜோதிமணி

 
p

பிரதமர் மோடியை தங்கள் மாநிலத்திற்குள் நுழையவிடாமல் பஞ்சாப் விவசாயிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.  ஓராண்டுகாலம் கொடுங்குளிரிலும், மழையிலும் போராடி 700 விவசாயிகள் மடிந்ததை,  அமைச்சர் மகன் விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்ததை விவசாயிகள் மறக்கவில்லை என்பதை மோடி உணரவேண்டும் என்கிறார் காங்கிரஸ் எம்.பி.  ஜோதிமணி.

மக்கள் எளியவர்களாக இருக்கலாம் ஆனால் வலிமையானவர்கள்.  அதிகாரம் வலிமையானது போல் தோன்றலாம்.  ஆனால் மக்கள் சக்தியின் முன் மண்டியிட்டே ஆகவேண்டும் என்பதே வரலாறு. 20 நிமிடம் காத்துக்கிடந்ததற்கே பிரதமரும் பாஜகவும் கொந்தளிக்கிறார்கள். ஓராண்டு போராடிய விவசாயிகள் எவ்வளவு துயரப் பட்டிருப்பார்கள் என்ற கேள்வியை எழுப்பும் ஜோதிமணி,

pi

மாநில அரசு மட்டுமல்ல ஒன்றிய உள்துறை அமைச்சகமும், பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையும் பிரதமரின் பாதுகாப்பிற்கு பொறுப்பானவர்கள். மிக  திட்டமிட்டு, கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.  பிரதமரின் பாதுகாப்பு அதி முக்கியமானது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை  என்கிறார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு , அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பயணத்திட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதலமைச்சரே நள்ளிரவு வரை பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கவனித்துள்ளார். இடையில் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது என்று சொல்லும் ஜோதிமணி,

பிரதமர் கூட்டத்தில் காலி நாற்காலிகள் மட்டும் கிடந்ததால் அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.  பயணத்திட்டம் மாற்றப்பட்டதற்கும், காலி நாற்காலிகளுக்கும் பஞ்சாப் முதலமைச்சர் எப்படி பொறுப்பேற்கமுடியும்? என்று கேட்கிறார்.

jo

பிரதமர் மோடி நேற்று பஞ்சாப்பில் நடைபெற இருந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்க சென்றார். இதற்காக  பதிந்தா விமான நிலையத்திற்கு சென்ற பிரதமர் மோடி,  அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக பயணிப்பதாக இருந்தார். ஆனால்,  மோசமான வானிலை காரணமாக 20 நிமிடங்கள் விமான நிலையத்தில் பிரதமர் காத்திருந்தார்.  அப்படியும் வானிலை சீர் அடையாததால் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலை மார்க்கமாக கடப்பது என்று முடிவு செய்தார். 

அப்படியே பயணம் செய்தபோது வழியில்,  மத்திய அரசு கொண்டு வந்து பின்னர் பெரும் போராட்டங்களுக்குப் பின்னர்  புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.  இந்த வேளாண் சட்டங்களுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து,  அந்த போராட்டங்களில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நியாயம் கேட்டு  பிரதமரின் கான்வாயை விவசாயிகள் மறித்தனர். இதனால் 20 நிமிடங்கள் மேம்பாலத்தில் காத்திருந்தார் பிரதமர் மோடி .   நிலைமை சீரடையாததால் மீண்டும் விமான நிலையம் திரும்பினார்  பிரதமர்.  இதனால் அவர் பங்கேற்க இருந்த பெரோஸ்பூர் பொதுக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து எழுந்துள்ள சலசலப்புகளுக்குத்தான் ஜோதிமணி இவ்வாறு பதிவிட்டிருக்கிறார்.