முதல் முறையாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து! காரணம் இதுதான்!

 
ஹ்

இந்தியாவில் முதல்முறையாக அல்வா கிண்டும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.   மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை  எட்டி விட்டது என்பதை குறிக்கும் வகையில் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.   முதல் முறையாக தற்போது ரத்து செய்யப்பட்டிருக்கிறது .

எந்த ஊரு நல்ல காரியத்தை செய்வதற்கு முன்பும் இனிப்பு பரிமாறுவது இந்தியர்களின் கலாச்சாரம்.   அந்த அடிப்படையில்தான் ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டுக்கு முன்னதாக அல்வா கிண்டுவது என்ற மரபு பின்பற்றப்பட்டு வந்தது.  கொரோனா   காரணமாக முதல் முறையாக இந்த ஆண்டு இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

ஹ

வரும் ஒன்றாம் தேதியன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.   பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே துவங்கி விடுவது வழக்கம். பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி பட்ஜெட் தாக்கல் செய்யும் தினத்திற்கு 10 நாட்களுக்கு முன்பாக துவங்கும்.   இந்த பணிகள் துவங்குகிறது என்பதை குறிக்கும் வகையில் தான் அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறும். 

 இந்த நிகழ்ச்சியில்  மத்திய நிதி அமைச்சர் மற்றும் இணை அமைச்சர்கள் பங்கேற்பார்கள்.   இந்த நிகழ்ச்சியுடன் தொடங்கும் பட்ஜெட்டும் பணிகளில் ஏராளமான ஊழியர்கள் பங்கேற்பார்கள்.   அவர்கள் அனைவரும் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தனிமைப்படுத்தப் படுகின்றார்கள்.   குடும்பத்தினருடன் தொலைபேசியில் கூட பேச அனுமதி கிடையாது.  

ஹல்

 கடந்த ஆண்டு கொரோனா தொற்று  பரவலை கருத்தில்கொண்டு டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் அதே போல் தான் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்கி உறுப்பினர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.   நடப்பாண்டிற்கான மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் நேற்று தொடங்கியுள்ளன.   கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அல்வா தயாரிப்பு நிகழ்ச்சி இந்த ஆண்டு கிடையாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.   அதற்கு பதிலாக பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

 பட்ஜெட் தயாரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டி விட்டது என்பதை குறிக்கும் வகையில் நடைபெறுகின்ற அல்வா கிண்டும் நிகழ்ச்சி முதல் முறையாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.