மாரிதாசுக்கு யார் யாரிடம் இருந்து பணம் சென்றிருக்கிறது? விசாரணை நடத்தக்கோரும் திருமுருகன்

 
ட்

தமிழகத்தில் பாஜகவின் பொய் வதந்திகளை யூட்யூப்பில் பரப்பி, தமிழின உணர்வாளர்களை கொச்சைப்படுத்தி வரும் மாரிதாஸ் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மே17இயக்கம் புகார் அளித்தது.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன்காந்தி,  ‘’மாரிதாஸ் பின்னால் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இருக்கின்றன.  மாரிதாஸ் பேசியது எல்லாம் கருத்து சுதந்திரத்தில் வராது.  உண்மையான கருத்து சொல்வதற்குத்தான் கருத்து சுதந்திரம் தேவைப்படும்.  ஆனால் மாரிதாஸ் தொடர்ந்து பொய்களையும் அவதூறுகளையும் மட்டுமே பரப்பி வந்திருக்கிறார் .  உதாரணத்துக்கு என் விஷயத்தையே எடுத்துக் கொள்ளலாம் .  என் விஷயத்தில் அவர் பல அவதூறுகளை பரப்பினார்.  நான் ஐநா மன்றத்திற்கு சென்று பேசவில்லை என்று சொன்னார்.   ஐநா மன்றத்தில் பேச அனுமதி கிடைத்ததன் அடிப்படையில்தான் எனக்கு விசா வழங்கப்பட்டது.

ma

 நான் ஐநா மன்றத்தில் பேசியதற்காக என் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று நீதிபதி என்னை விடுதலை செய்தார்.  நீதிபதிக்கு தெரியாத தா இந்த மாரிதாசுக்கு  தெரிந்திருக்கிறது.  எங்கள் இயக்கம் உட்பட பல்வேறு இயக்கங்களை தேசவிரோதிகள் என்றும் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்றெல்லாம் பொய் பேசி கொச்சைப்படுத்தி இருக்கிறார்.  

அவர் புகார்களில் ஆதாரம் இருந்தால் ஆட்சி செய்யும் பாஜகவின் உளவு அமைப்புகள் மூலம் விசாரணை நடத்தி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.  ஆனால் பொய்யை மட்டுமே பேசி எங்கள் நற்பெயரை கெடுக்கும் திட்டத்தோடு மாரிதாஸ் பாஜகவால் இயக்கப்பட்டிருக்கிறார்.  மாரிதாஸ் யூடியூப் அக்கவுண்ட் கீழே அவரது வங்கிக் கணக்கு விவரம் கொடுக்கப்பட்டிருக்கிறது.   எங்களை காசு வாங்கிக் கொண்டு செயல்படுகிறோம் என்று அவதூறு வீசுகிறார் மாரிதாஸ்.  ஆனால்அறையில் உட்கார்ந்துகொண்டு வீடியோ போடுவதற்கு ஏன்  வங்கி கணக்கை வெளியிட்டு காசு கேட்கிறார்.  அவரது கணக்கை முழுமையாக விசாரிக்க வேண்டும்.  அவருக்கு யார் யாரிடம் இருந்து பணம் சென்றிருக்கிறது என்பது பற்றி அரசு முழு விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்தார்.