ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு செய்வோருக்கு அடி-உதை : அதிமுக தலைமை அலுலகத்தில் பதற்றம்

 
o

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான , உட்கட்சி தேர்தல் வரும் 7-ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், இதற்காக  இன்று மற்றும் நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 வாக்காளர்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடாமல் நோட்டீஸ் பீரியட் என்கிற இருபத்தியோரு நாட்கள் அவகாசம் கொடுக்காமல் திடீரென்று தேர்தலை அறிவிப்பதால் இந்த தேர்தலை தடை செய்யக் கோரி தமிழகம் முழுவதும் அதிமுகவினர் வழக்கு தொடுத்து வருகின்றனர்.   யாரையும் வாக்களிக்க விடாமல் எடப்பாடி பழனிச்சாமி - ஓ.பன்னீர்செல்வம்  மட்டுமே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் படுவதாக அறிவிக்க போகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து தேர்தலை ரத்து செய்யக் கோரி வருகின்றனர்.

om

 இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்று கட்சி தலைமையகத்தில் அதிரடி காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

 இன்று முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்று வேட்புமனு தாக்கல் செய்ய செல்கிறார்கள்.  அவர்கள் எல்லாம் விரட்டியடிக்கப் படுகிறார்கள்.

 சென்னை ஓட்டேரியில் உள்ள ஓமபொடி பிரசாத் என்பவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றிருக்கிறார் . இவர் எம்ஜிஆரின் அதிதீவிர பக்தர் ஆவார்.  இவர் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்திருக்கிறார் என்று தெரிந்ததும் அங்குள்ள கழக நிர்வாகிகள் அவரை சூழ்ந்து கொண்டு அடித்து உதைத்து விரட்டி அடித்திருக்கிறார்கள்.  இதனால் அங்கு பெரும் பரபரப்பும் பதட்டமும் நிலவி இருக்கிறது .

இதையடுத்து ஓமப்பொடி பிரசாத் ராயப்பேட்டை போலீசில் புகார் அளித்திருக்கிறார்.  ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு தான் போட்டியிட இருப்பதாகவும் , அதற்கு வேட்புமனு செய்வதற்காக அதிமுக தலைமை அலுவலகம் செல்ல தனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.