வேட்பாளர் - வாக்காளர் : சிக்கலில் உதயநிதி
உதயநிதி ஸ்டாலினின் வெற்றி செல்லாது என்று வேட்பாளர் வழக்கு தொடுத்திருக்க, அவரது வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என்று வாக்காளர் வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியில் எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளர் எம். எல். ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
, நீதிபதி பாரதிதாசன் முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது, கடந்த மூன்று மாதங்களாக எதிர் மனுதாரர் தரப்பில் இருந்து இன்னும் வாதங்களை முன்வைக்க வில்லை என்பதை சுட்டிக்காட்டினார் . அடுத்த விசாரணையின் போது வாதங்களை தொடங்காவிட்டால் மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்திருக்கிறார்.
இந்த நிலையில் ஆர். பிரேமலதா என்ற வாக்காளர், உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளதாக சொல்லி அவர் வேட்பு மனுவை ஏற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
இந்த வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம், தொகுதி தேர்தல் அலுவலர் , எம்எல்ஏ உதயநிதி ஆகியோர் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார் .