ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக 23 சாட்சிகளிடம் திரட்டப்பட்ட ஆதாரங்கள்

 
kt

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் இருப்பதாக நீதிமன்றத்தில் போலீஸ் தெரிவித்திருக்கிறது.  வேலை வாங்கி தருவதாக நடைபெற்றுள்ள பணமோசடி வழக்கில் போலீசார் இவ்வாறு தெரிவித்திருக்கிறார்கள்.

 ஆவின் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக சொல்லி மூன்று கோடி ரூபாய் வரைக்கும் பெற்றுக்கொண்டு சொன்னபடியே பணியும் வழங்காமல் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி விட்டதாக முன்னாள் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி , பலராமன், முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது விருதுநகர் குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

h

  விஜய் நல்லதம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கில் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட 4 பேரும் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  நீதிபதி நிர்மல்குமார் இந்த முன்ஜாமின் மனு மீது இறுதி விசாரணை நடத்தினார் .

அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக்,   முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகாரில் 23 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டு இருப்பதாகவும்,  ராஜேந்திரபாலாஜி அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம்தான் இந்த பண பரிவர்த்தனை நடைபெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  நல்ல தம்பியும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக தெரிவித்ததையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி,   முன் ஜாமீன் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்து இருக்கிறார்.