சட்டசபைக்குள்..துகில் உரித்த துரியோதனன்..பார்த்துவிட்டு கதறிய மாஜி முதல்வர்

 
டு

இனிமேல் நான் சட்டசபைக்கு வர மாட்டேன்.  என் சுயமரியாதையை அடமானம் வைத்து விட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினராக நான் இனிமேல் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன்.  முதல்வரான பின்னர் தான் இந்த சட்டப்பேரவைக்கு ஒரு அடி எடுத்து வைத்தேன் என்று கண்ணீருடன் சபதம் போட்டிருக்கிறார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும்,  முன்னாள் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு.    சந்திரபாபுநாயுடுவின் இந்த கண்ணீரும் சபதமும்  ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ச்ஹ்

 ஆந்திர மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.   ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ  அம்பதி ராம்பாபு பேசும்போது,  எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து பேசினார். அதிலும் சந்திரபாபு நாயுடுவின் மனைவி குறித்து சில அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.   இதன் பின்னர் தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் பேரவைத்தலைவர் முன்வந்து கூச்சலிட்டு,  எம்எல்ஏ அம்பதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.  இதற்கு ஆளும் கட்சி கட்சி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதையடுத்து தெலுங்கு தேசம் கட்சியினர் வெளிநடப்பு செய்தார்கள்.   இதன் பின்னர் சில மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் அவை கூடியது .  அப்போது எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு பேசும்போது தனது வேதனையை தெரிவித்தார்.    ’’நான் ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாவிட்டாலும் சரி,  என் மனைவி நான் அரசியலில் ஈடுபடுவதை ஊக்கப்படுத்துவது தவிர அவர் எந்த காலத்திலும் அரசியலுக்குள் வந்ததில்லை.   இதுவரை அவர் என்னை அவமானப்படுத்தியது இல்லை.  ஆனால் என்னால் அவர் அவமானப்பட்டு விட்டார்’’என்று சொல்லிவிட்டு கண் கலங்கினார்.

 ’’என்னுடைய 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இது போல நான் வருத்தப்பட்டது கிடையாது . நான் பல போராட்டங்களை பார்த்திருக்கிறேன்.  என் வாழ்க்கையில் பல ஏற்ற இறக்கங்களை சந்தித்து இருக்கிறேன்.  சட்டப்பேரவையில் காரசாரமான விவாதங்கள் எல்லாம் பங்கேற்று இருக்கிறேன்.  எதிர்க்கட்சியாக இருந்த போதிலும் சரி ஆளுங்கட்சியாக இருந்த போதிலும் சரி.   பல தீவிரமான வாக்குவாதங்களில் ஈடுபட்டு இருக்கிறேன்.  ஆனால் இதுபோன்று எதிர்க்கட்சிகள் தரக்குறைவாக நடந்தது நான் இது வரைக்கும் பார்த்ததேயில்லை.  

ச்ஹ்ஹ்

 மகாபாரதத்தில் கௌரவர்கள் நடத்திய சபையை போன்றுதான் இருக்கிறது இன்று நடந்த கூட்டத் தொடர்.   மகாபாரதத்தில் பாஞ்சாலியின் துகிலை துரியோதனன் உரித்து பாண்டவர்களை அவமதித்தது  போன்று உணர்கிறேன்.   இதை அனைத்தையும் மவுனமாக சபாநாயகர் பார்த்துக் கொண்டிருப்பது தான் வேதனையாக இருக்கிறது.

ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என் மனைவியைப் பற்றி தவறான வார்த்தைகளால் பேசுகிறார்கள்.   அதற்கு பதிலளித்து பேசுவதற்கு கூட சபாநாயகரை எனக்கு வாய்ப்பு வழங்கவில்லை.   என்னை பேசவும் விடவில்லை.   அதனால் இதுபோன்ற அவையில் இனிமேல் நான் பங்கேற்க மாட்டேன்.  அதே சமயத்தில் வெளியே என் உரிமைகளுக்காக போராடுகிறேன்.   கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ஆளுங்கட்சியினர் என்னை அவமானப் படுத்தி வருகிறார்கள்.  என் சுயமரியாதையை அடமானம் வைத்து விட்டு நான் சட்டப்பேரவைக்கு வரமாட்டேன்.  மக்களிடம் சென்று போராடி அவர்களின் ஆதரவைப் பெற்று மக்களின் தீர்ப்பை நான் மீண்டும் முதல்வரான பின்னர்தான் சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைப்பேன்’’ என்று சபதமிட்டு வெளியேறினார் சந்திரபாபு.

 அவர் பேசிய போது அவரால் பேச முடியாமல் தொண்டை அடைத்தது.  கண்ணீர் விட்டு அழுத சந்திரபாபு நாயுடு முகத்தை தனது கைக்குட்டையால் மூடிக்கொண்டு பேச முடியாமல் தவித்த போது சட்டப்பேரவை கொஞ்ச நேரம் நிசப்தமானது.