ஜெயலலிதாவுக்கு பிடித்தமான அது உங்களிடமும் இருக்க விருப்பமா?

 
jj

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் சங்கரலிங்கம், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜெயலலிதா பற்றிய நினைவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.

poo

’’அம்மாவிற்கு பிடிச்சது என்ன? அது நம்மகிட்ட இருந்தா நல்லா இருக்கும் என்று நினைக்கிறீங்களா! இதைப் படிங்க.
அம்மா அவர்களுக்கு மிகவும் பிடித்தது ராணிமுத்து காலண்டர். அதில் இருக்கும் முருகனின் அழகை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. ஒவ்வொரு வருடமும் அம்மா அவர்கள் ராணிமுத்து காலண்டரை வாங்கி வரச் சொல்லுவார்கள். அவர்கள் எந்த தேதியை குறிப்பதாக இருந்தாலும் அது ராணிமுத்து காலண்டரை பார்த்துதான். அம்மா அவர்கள் அதிகம் பயன்படுத்தியதில் இதுவும் ஒன்று. அம்மா அவர்கள் வசிக்கும் எல்லா இடங்களிலும் காட்டாயம் இடம்பெறும். எங்கு சென்றாலும் மறக்காமல் பயணிக்கும். 

p

அலுவலகத்திற்கும் அம்மா கொடுத்துவிடுவார்கள். அம்மாவுக்கு பிடித்தது நம் வீட்டில் இருக்க வேண்டும் நினைப்பவர்கள் ராணிமுத்து காலண்டரை வாங்கி வீட்டில் மாட்டுங்கள். முருகனை கும்பிடும் போதெல்லாம் அம்மா உங்களை ஆசீர்வதிப்பார்.

p

நண்பர்களிடம் 'அம்மாவுக்கு பிடித்த காலண்டரை உங்களுக்கு தருகிறேன்' என்று சொல்லி வாழ்த்து தெரிவித்தேன். நண்பர்கள் அற்புதமான 'பாம்பன் தாத்தா' திருவுருவம் பொறித்த காலண்டரை வழங்கினர். உடனே நான் அம்மாவுக்கு பிடித்த ராணிமுத்து காலண்டரை அவர்களுக்கும் வழங்கி உவகை கொண்டேன். அதில் அப்படி ஒரு புளாங்கிதம். ’’அடைவார் என்கிறார்.