அரசியல் செய்யணுமே தவிர வியாபாரம் செய்யக்கூடாது - மாஜி முதல்வர் கடும் தாக்கு

 
ன்

ஆட்சியைக் கவிழ்த்து விட்டு எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கி  விட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து ஆட்சியைப் பிடிக்கின்ற செயலை செய்து வருகிறது  என்று பாஜக மீது புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டி இருக்கிறார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ பதிவில்,   உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்துகின்ற வகையில்,  யோகி ஆதித்யநாத் அரசு ஆட்டம் கண்டு இருக்கிறது என்று சொல்லியிருக்கும் நாராயணசாமி,   பாஜக அரசியல் செய்ய வேண்டுமே தவிர வியாபாரம் செய்யக்கூடாது என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ன்ன்

403 இடங்களைக் கொண்ட உத்தரபிரதேசத்திற்கு  பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக  சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. 7 கட்ட தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் மார்ச் 10-ம் தேதி எண்ணப்படுகின்றன.

ஆட்சியைத் தக்க வைப்பதற்கு ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.  ஆனால் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்காது என்று நினைத்து அக்கட்சியிலிருந்து அமைச்சர்களும் எம்எல்ஏக்களும் அடுத்தடுத்து ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றார்கள்.  இதுவரைக்கும் அக்கட்சியிலிருந்து பதினோரு எம்எல்ஏக்கள் வெளியேறி இருக்கிறார்கள் .   இந்த நிலையில் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி மேற்கண்டவாறு விமர்சித்திருக்கிறார்.