ஆட்டத்தை துவங்கிய திமுக - அதே அதிர்ச்சியில் கூட்டணிகள்

 
ட்ம்

சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் கடைசி வரைக்கும் இழுத்துக்கொண்டே சென்றது .  கடைசியில் தனித்து  போட்டியிடுவதை விட,  புதிய அணி அமைப்பதை விட ஜெயிக்கிற கட்சியில் இருப்பதுதான் நல்லது.  அதிமுக கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருப்பதால் அடுத்து திமுகவுக்கு தான் அதிகம் வெற்றி வாய்ப்பு இருக்கிறது.  அதனால் ஜெயிக்கிற பக்கம் இருப்பது தான் நல்லது என்று முடிவெடுத்து கொடுத்த இடங்களை வாங்கிக்கொண்டு அத்தேர்தலில் போட்டியிட்டார்கள். தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கூட்டணி கட்சிகளுக்கு அதே நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

ட்ட்

 மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் என்று நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மொத்த பதவிகளையும் அல்ல திமுக அதிரடியான திட்டம் வகுத்திருக்கிறது.   நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை மட்டுமே இலக்காக வைத்து கட்சியின் உள்கட்டமைப்பை பலப்படுத்தவும் திமுக மேலிடம் தனிக்கவனம் செலுத்தி வருகிறது.  அதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதியிலும் உள்ள வாக்காளர்களில் மூன்றில் ஒரு பகுதியினரை திமுக உறுப்பினர்களாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது என்கிறார்கள்.  இதற்காகவே ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கு ஒரு தலைமை பொறுப்பாளர் அவரின் கீழ் 10 பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். 

 கட்சியின் உள் கட்டமைப்பை பலப்படுத்தும் திட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும் 100 சதவீத வெற்றியை பெற முடியும் என்று நினைக்கிறார்களாம் மா.செ.க்கள்.   கூட்டணிக் கட்சிகளின் தயவு இல்லாமலேயே வெற்றியை பெற மா.செ.க்களும் வியூகம் வகுத்து கொடுத்திருக்கிறார்கள் தலைமைக்கு .  அதனால்தான் கூட்டணி கட்சிகளிடம் இடப்பங்கீடு பேச்சு நடத்துவதற்கு முன்பாகவே மாவட்டம் வாரியாக வேட்பாளர்கள் தேர்வுக்கான நேர்காணல் பணியில் துவங்கப்பட்டிருக்கிறது.

ட்ம்

 நகராட்சிகளின் தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதுடன்,  ஓட்டுப்பதிவினையும் இரண்டு கட்டமாக நடத்த தமிழக தேர்தல் ஆணையம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.  அப்படி ஒரு முடிவு அறிவிக்கப்பட்டால்  மேயர்,  நகராட்சித் தலைவர்கள்,  பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு கூட்டணிக் கட்சியினரை எதற்காக தேர்ந்தெடுக்கவேண்டும் ?அவர்களுக்கு பதிலாக சொந்த கட்சியினருக்கு உள்ளாட்சி தலைவர்களுக்கான பதவிகளை வாய்ப்புகளைத் தந்து கட்சியினை இன்னும் படுத்தலாமே என்றும் நினைத்து திமுக மேலிடம் அதிரடி ஆட்டத்தை துவங்கியிருக்கிறது.

 திமுக கொடுக்க கொடுக்கும்  இடங்களைத்தான் கூட்டணி கட்சிகள் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.  கேட்கிற இடங்கள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதால் கூட்டணிக் கட்சியினர் அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்கள் என்று தகவல்.