மீண்டும் உதயநிதி புராணம் பாடி சபாநாயகரை கடுப்பேற்றிய திமுக எம்.பி.

 
u u

 கடந்த 29 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில்  என்.வி. என். சோமு,  எம்.எம். அப்துல்லா,  கனிமொழி , கே .ஆர். எம். ராஜேஷ் குமார்ஆகியோர் போட்டியின்றி தேர்வானார்கள்.    மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  அப்போது ராஜேஷ்குமார் தனது உரையில், ’’வெல்க தளபதி வெல்க அண்ணன் உதயநிதி’’ என்று சொன்னதை கவனித்த வெங்கையா நாயுடு,  இதெல்லாம் அவை குறிப்பில் ஏறாது என்று கடிந்துகொண்டார்.

 ராஜேஷ்குமாரின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.   நாடாளுமன்றத்திலும் புகழ் பாட வேண்டுமா? சபாநாயகரே கடுப்பாகிவிட்டாரே? என்று  கடுமையாக விமர்சித்து வந்தார்கள்.   இந்த நிலையில் மீண்டும் சபாநாயகரை வெறுப்பேற்றி இருக்கிறார் ராஜேஷ்குமார்.

u

’’என்னை தேர்வு செய்த தளபதி ஸ்டாலின் அவர்களையும் இளைஞர் அணியின் எழுச்சி நாயகனாக விளங்கும் எங்கள் அண்ணன் உதயநிதி அவர்களையும் வணங்குகிறேன்.  

 இந்திய படை தளபதி பிபின் ராவத் குன்னூரில் ஏற்பட்ட விபத்தில் இறந்துவிட்டார்.   தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொண்டு, மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்.  உடனடியாக நேற்றைய தினம் மாலை 5 மணிக்கு  நீலகிரி மாவட்டத்திற்கு சென்று அங்கு இருக்கின்ற ராணுவ பயிற்சி கல்லூரிக்கு சென்று தனது இரங்கலை பதிவு செய்தார்.

 நீலகிரி சென்று ராணுவ வீரர்களிடம் நிலையை குறித்து விசாரித்தார் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே,  மற்ற உறுப்பினர்கள் தலையிட,  உடனே சபாநாயகராக சஸ்மிட் பத்ரா,   மசோதாவை பற்றி மட்டும் பேசுங்கள் என்று சொல்ல,  அவையிலும் சலசலப்பு எழுந்திருக்க,  பக்கத்தில் அமர்ந்திருந்த டிகேஎஸ் இளங்கோவன் எழுந்து,   எங்கள் தலைவருக்கு நன்றி கூறினோம் என்று சொல்ல அமைதியானார்கள்,  தொடர்ந்து பேசினார்  ராஜேஷ்குமார்.

rj

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினால் எல்லா ஏற்பாடுகளையும் முடிந்த பின்னரே அவர் அங்கிருந்து கிளம்பினார் என்று கூறி முடிப்பதற்குள் அவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.   உடனே மற்றொரு தம்பியான டிகேஎஸ் இளங்கோவனிடம் இருந்து எங்கள் தலைவருக்கு நாங்கள் நன்றியை சொல்லுகிறோம். உங்களுக்கு என்ன என்று கேட்க , மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்கள் என்று மீண்டும் சொல்லி கடுப்பானார் சபாநாயகர்.

 ஆனால் மீண்டும் அதைப் பற்றியே பேச ஆரம்பித்ததும்,  கடுப்பான சபாநாயகர் மீண்டும் , ஏன் இதையே பேசுறீங்க என்று கடிந்து கொண்டார். அதன் பின்னரும் ராஜேஷ்குமார் பெண்களுக்கு சொத்துரிமையை விவசாயிகளுக்கு கடன் ரத்து என்று மக்களின் வாழ்வுக்கு உழைத்தவர் கலைஞர் உழைப்பு உழைப்பு என்று இருப்பவர் என்றால் தளபதி என்று பேச,     ராஜேஷ்குமார் ஜி மசோதாவைப் பற்றி மட்டும் பேசுங்க.  உங்களுக்கு நேரம் அதற்கு மட்டும் இருக்கு.  இதெல்லாம் பேசாதீங்க என்று சொல்ல,  அப்போதுதான் சப்ஜெக்ட் பற்றி பேச ஆரம்பித்திருக்கிறார் ராஜேஷ்குமார்.