திமுக - அதிமுக-பாஜக சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள்

 
s

திமுக, அதிமுக, பாஜக கட்சிகள் கோவை மேயர் தேர்தலை முக்கியமாக கருதுகின்றன.   அதனால்தான் முழுமூச்சாக களமிறங்கி அக்கட்சியினர் வேலை செய்து வருகின்றனர்.  

 நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கோவையில் திமுகவிற்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை.  இந்த மேயர் தேர்தலிலாவது எப்படியும் கோவையை கைப்பற்றி விட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கணக்கு போட்டுத்தான்,  கரூர் மாவட்டத்து செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்தில் கட்சியை பலப்படுத்த நியமித்திருக்கிறார்.   அவரு கோவை பகுதியிலேயே தங்கியிருந்து கோவையில் திமுகவின் செல்வாக்கு உயர்த்த பாடுபட்டு வருகிறார்.

ss

 கடந்த அதிமுக ஆட்சியில் மிகவும் செல்வாக்காக இருந்தவர் எஸ். பி. வேலுமணி . அவர் தற்போது இந்த கோவை மேயர் தேர்தலில் கோட்டை விட்டுவிட்டால் தனது செல்வாக்கை இழக்க நேரிடும் என்பதால் அவரும் மேயர் தேர்தலை குறிவைத்து இருக்கிறார் என்கிறது கட்சி வட்டாரம்.   அதேபோல் பாஜகவும் கொங்கு மண்டலத்தை குறிவைத்து காய் நகர்த்தி வரும் நிலையில்,  கோவை மேயர் தேர்தலில் எப்படியாவது வந்து விட வேண்டும் என்று முயற்சித்து வருகிறதாம்.

கட்சிகள் இப்படி கோவை மேயர் தேர்தலை கணக்குப் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கும் நிலையில்,  கட்சிகளின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பது குறித்து ஒரு பட்டியல் பரவிக் கொண்டிருக்கிறது.

 திமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்குவார்கள் என்று  கார்த்திகேய சிவசேனாபதி,  மகேந்திரன் பெயர்கள் அடிபடுகின்றன.  மக்கள் நீதி மையத்தில் இருந்து விலகி திமுகவில் இணைந்தவர் மகேந்திரன். 

mh

 அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும் முன்னாள் மேயருமான செ.ம.வேலுச்சாமி பெயர் அடிபடுகிறது.  இவருக்குத்தான் மேயர் சீட்டு என்று  அவரது ஆதரவாளர்கள் அடித்துச் சொல்கிறார்.   ஒருவேளை பெண் வேட்பாளர் என்றால் எஸ். பி. வேலுமணியின் நெருங்கிய நண்பரான வடவள்ளி சந்திரசேகரின் மனைவி சர்மிளா தான் என்கிறார்கள்.

 வழக்கம்போல அதிமுகவின் கூட்டணிக் கட்சியான பாஜகவும் மேயர் தேர்தலில் களமிறங்க முடிவெடுத்திருக்கிறது.   பாஜக மாநில இளைஞரணி செயலாளர் பிரீத்தி லட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினரான மைதிலியின் இந்த போட்டியில் களமிறங்க இருக்க தயாராகி வருகிறார்கள்.   இதைத் தவிர கீதா,  ஜெயலட்சுமி என்கிற பெண்களும் இந்த போட்டி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.   அதுமட்டுமல்லாது கோவை மாவட்ட பாஜக தலைவர் நந்தகுமார்,  முன்னாள் தலைவர் செல்வகுமார் ஆகியோரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்று தகவல்.