25 அமைப்புகளிடம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வாங்கினாரா திருமாவளவன்?

 
ட்

 விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீது ஆதி தமிழர் முன்னேற்ற கழகத்தின் தலைவர் நாகராஜன் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

திமுக ,கிறிஸ்துவ, இஸ்லாமிய அமைப்புகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட அமைப்புகளிடமிருந்து திருமாவளவன் பணம் வாங்கியிருக்கிறார்.  2000 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் திருமாவளவன் என பேசியிருக்கிறார் நாகராஜன்.  இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அடி

 திருமாவளவன் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார்.  அப்போது அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், தனது சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தார்.   அதில் 58 லட்சத்து 71 ஆயிரத்து 292 ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும் 18 லட்சத்து 27 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிற்கு அசையா சொத்துக்களும் உள்ளன என மொத்தம் 76 லட்சத்து 99 ஆயிரத்து 92 ரூபாய் இருப்பதாக கூறியிருந்தார்.

 2014 தேர்தலின்போது மதிப்பு 76 லட்சத்து 50 ஆயிரத்து 241 ரூபாய் இருந்த சொத்து மதிப்பு, 5 ஆண்டுகளில் 48 ஆயிரத்து 851 ரூபாய் மட்டுமே அதிகரித்திருக்கிறது.   அப்படி இருக்கும்போது    2000 கோடி ரூபாய்க்கு சொத்து சேர்த்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்த விவகாரத்தை உற்று நோக்குகிறது என்றும்  பரபரப்பான பேச்சு எழுந்திருக்கிறது.