40 அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்த்தாரா செந்தில்பாலாஜி?

 
se

அதிமுகவினரை மிரட்டி திமுகவில் சேர்க்கிறார் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று  கரூர் மாவட்ட அதிமுக வின் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.  முறையான ஆவணங்கள் இல்லாததால் இந்த வழக்கை நீதிபதி தள்ளுபடி செய்து இருக்கிறார்.

 கரூர் மாவட்டத்தின் ரெட்டிபாளையத்தை சேர்ந்தவர் மதுசூதன்.  இவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்த மனுவில் கரூர் மாவட்ட அதிமுகவின் கிழக்கு ஒன்றிய செயலாளராக இருக்கிறேன்.  மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி,  அதிமுகவைச் சேர்ந்தவர்களை சட்டவிரோதமாக திமுகவில் சேருமாறு கட்டாயப்படுத்தி வருகிறார் 

அதிமுகவைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களை மிரட்டுகிறார்.  மிரட்டல்கள் மூலமாக திமுகவில் சேருமாறு கட்டாயப்படுத்துகிறார்.  போலீசாரும் இதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.  இப்படித்தான் அதிமுகவை சேர்ந்த சுமார் 40 பேரை திமுகவில் சேர்த்திருக்கிறார் செந்தில்பாலாஜி என்று தெரிவித்துள்ளார்.

m

 மேலும்,  அமைச்சர் செந்தில்பாலாஜி,  அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் போலீசார் அதிமுகவில் சேருமாறு என்னை அணுகினார்கள்.  அதிமுகவில் சேர வில்லை என்றால் என் மீது போதை பொருள் கடத்தல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப் போவதாக மிரட்டினார்கள்.   கடந்த நவம்பர் 15ஆம் தேதி அன்று அதிகாலை 2 மணி அளவில் வீட்டிற்கு வந்த கரூர் மாவட்ட போலீசார் எந்த காரணமும் இல்லாமல் என்னை விசாரணைக்கு அழைத்தார்கள்.  முறையான காரணங்கள் இல்லாததால் நான் விசாரணைக்கு செல்ல மறுத்தேன்.  ஆனால் போலீசார் என் மீது தொடர்ச்சியாக பொய் வழக்கு பதிவு செய்யலாம் என்று அஞ்சுகிறேன்.

 இதனால் காவல்துறையினர் என்னை தொந்தரவு செய்யக்கூடாது என உத்தரவிட வேண்டும் என அந்த வழக்கின் மனுவில் கூறியிருந்தார்.

 மனுவை விசாரித்த நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்,   மதுசூதன்  குறிப்பிட்ட போலீஸ் நிலையத்திற்கு உத்தரவிடுமாறு கூறவில்லை.  முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஒட்டுமொத்தமாக உத்தரவிடக்கோரி இருக்கிறார்.  அப்படி ஒட்டுமொத்தமாக பொதுவாக உத்தரவு வழங்க முடியாது என்று சொல்லி அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் .