’’32 மாஜிக்களையும் தூக்கி உள்ளே போட்டிருக்க முடியும்’’

 
tts

திமுக ஆட்சிக்கு வந்ததுமே 32 முன்னாள் அமைச்சர்களையும் தூக்கி உள்ளே வைத்திருக்க முடியும்.  ஆனால் அப்படி செய்யவில்லை.  அப்படி செய்திருந்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து விட்டதாகச் சொல்லி விடுவார்கள். அதனால் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்காகத் தான் கால தாமதமாகிக் கொண்டிருக்கிறது.  இந்த 32 பேர் மீதும் எதிர்க்கட்சியாக இருக்கும் போதே அவர்களின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் சமர்ப்பித்திருக்கிறது திமுக என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன் .

tt

திமுகவின் தேனி மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தங்க. தமிழ்ச்செல்வன்,  முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமுறை விவகாரம் குறித்து பேசியபோது இதை தெரிவித்து இருக்கிறார்.   உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்.  அப்படித்தான் வேலை வாங்கி தருவதாக பல கோடி மோசடி செய்த ராஜேந்திர பாலாஜி தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும்.  தன் மீது தவறு இல்லை என்றால் அவர் அதை நிரூபித்து வெளியே வரட்டும் என்கிறார்.

 மேலும்,  இதனால் அதிமுகவினர் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லி வருகிறார்கள்.  இது பழிவாங்கும் நடவடிக்கை அல்ல.  திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதே எடப்பாடி பழனிச்சாமி,  ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட 32 அமைச்சர்கள் மீதும் ஆளுநரை சந்தித்து ஒரு பட்டியல் அளிக்கப்பட்டிருக்கிறது.  ஆதாரப்பூர்வமாக பட்டியலிட்டு கொடுக்கப்பட்டிருக்கிறது.  தவறு செய்திருந்தால் 32 பேரும் தண்டனை அனுபவிக்க வேண்டும்.    இதுதான் திமுகவின் நிலைப்பாடு என்கிறார் தடாலடியாக.

eps

 அதிமுக அமைச்சர்கள் வீட்டில் தொடர்ந்து ரெய்டு நடந்து வருவது குறித்து எடப்பாடி பழனிசாமி ஆர்ப்பாட்டத்தின்போது,  போடாதே போடாதே பொய்வழக்கு போடாதே என்று கோஷமிட்டது வேடிக்கையாக இருக்கிறது.   5 ஆயிரம் கோடி ரூபாய் நெடுஞ்சாலைத்துறையில் ஊழல் குற்றச்சாட்டு செய்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு.  தவறு செய்தால் நிச்சயம் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் கைது செய்யப்படுவார்கள்.  யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்று சொல்லியிருப்பவர்,  திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே அந்த 32 பேரையும்  தூக்கி உள்ளே வைத்திருக்க முடியும்.  அப்படி செய்திருந்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் என்று சொல்லியிருப்பார்கள்.  ஆனால்,  சட்டப்படி அவர்கல் தண்டனை பெறுவதற்கு கொஞ்சம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்று சொல்லி அதிர வைத்திருக்கிறார்.