கொண்டிருக்கிறார் - கொண்டிருக்கிறான் : அன்று நடந்த டங் ஸ்லிப்

 
aw aw

தன்னை இன்னொரு எம்ஜிஆர் ஆக நினைத்துக் கொண்டிருக்கிறான் எடப்பாடி பழனிச்சாமி என்று அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா பேசிய ஆடியோ வெளியாகி கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  

எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் இதனால் கொந்தளித்தனர்.   சென்னையில் நடந்த மா.செ.க்கள் கூட்டத்தில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.  முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், அன்வர்ராஜாவை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்.  பலரும் அன்வர்ராஜாவுக்கு எதிராக கொந்தளிக்க அவர் எல்லோரும் முன்பாகவும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

அன்றைக்கு நடந்தது என்ன?  தெரிந்தே ஒருமையில் பேசினாரா அன்வர்ராஜா? என்றால் இல்லை என்றும் ,  டங்க் ஸ்லிப் ஆகி விட்டது என்றும் நடந்ததை விளக்கியிருக்கிறார்.

aw

 சசிகலாவுக்கு ஆதரவாக தொடர்ந்து அன்வர்ராஜா பேசி வருவதால்,  ஒருவர் திடீரென்று அன்வர் ராஜாவுக்கு போன் செய்து,  சசிகலாவுக்கு ஆதரவாக பேசும் உங்களை அடிக்க பழனிச்சாமி ஆள் அனுப்பி இருக்கிறார் என்று சொல்ல,  பழனிச்சாமி தன்னை இன்னொரு  எம்.ஜி.ஆர்.  ஆக  நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று சொல்வதற்கு பதிலாக கொண்டிருக்கிறான் என்று  கூறிவிட்டேன் .

அதை கவனமாக  எடுத்து பதிவு எடுத்து வெளியில் பரப்பி என்னை சிக்கலில் மாட்டி வைத்து விட்டார்கள்.   ஒரு அறைக்குள் இருந்து நான் பேசியது வெளியே கொண்டு வந்து விட்டார்கள்.    அதுவும் ’கொண்டிருக்கிறார்’ என்று சொல்ல வந்த நான்,. டங்  ஸ்லிப் ஆகி ’கொண்டிருக்கிறான்’ என்று சொல்லிவிட்டேன்.   உடனே நான் எடப்பாடி பழனிச்சாமியை ஒருமையில் பேசி விட்டதாக எல்லாரும் கொந்தளிக்கிறார்கள். 

அறைக்குள்  நடந்ததை வெளியே கொண்டு வந்து பிரச்சனை ஆக்கியதால்  மன்னிப்பும் கேட்டு விட்டேன்.  ஆனாலும் இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொண்டு மா.செக்கள் கூட்டத்தில் பலர் வம்பு செய்தார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.