மீண்டும் தேர்தலில் போட்டியிட விரும்பாத முதல்வர்

 
ந்ர்

உத்தரப் பிரதேசம்,  உத்தரகாண்ட்,  கோவா,  பஞ்சாப், மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு வரும் 10ஆம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது.   தேர்தல் பணிகளில் ஐந்து மாநிலங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன.

 உத்தரகாண்ட் மாநிலத்தில் திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக பதவியேற்று நான்கு ஆண்டுகள் நிறைவடைய சில நாட்களே இருந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார் தீரத் சிங் ராவத்.  நான்கு மாதங்கள் பதவியில் இருந்த நிலையில் அவர் ராஜினாமா செய்ததும் அதன் பின்னர் புஷ்கர தாமி பதவியேற்றார்.

ந்ந்

 தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திரிவேந்திர சிங் ராவத் மீண்டும் தொய்வாலா தொகுதியில் நிறுத்தப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் அவர் போட்டியிடவில்லை என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.   இது குறித்து அவர் கட்சிக்கு புஷ்கர தாமி இளம் தலைவராக கிடைத்திருக்கிறார்.

 மாறிவிட்ட அரசியல் சூழ்நிலையில் 2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிடக்கூடாது என்று நினைக்கிறேன்.  மற்றபடி கட்சிக்கு கட்சியின் வெற்றிக்கு முழுமையாக உழைப்பேன் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.