முதல்வர் முன்னாடி எம்.எல்.ஏ போட்ட நாற்காலி சண்டை
அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அந்த காங்கிரஸ் எம்எல்ஏ மேடையில் தனக்கு முதல் வரிசையில் நாற்காலி கொடுக்காததால் மேடையை விட்டு கீழே இறங்கியவர் கூட்டத்தை விட்டே சென்றதால் அதிர்ச்சிக்குள்ளாகி இருந்திருக்கிறார் முதல்வர் . இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த அரசு விழாவில் அம்மாநில முதல்வர் சிவராஜ் சவுகான் மற்றும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித். ய சிந்தியா உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர் மாவட்ட நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
#MadhyaPradesh: Enraged over not being given #Chair in front row during #TansenSamaroh, #Congress MLA from Gwalior (East), Satish Sikarwar left the programme in a huff. The district administration tried to convince him to sit in second row but he refused to listen to him. pic.twitter.com/VmYnL4dBsT
— Free Press Journal (@fpjindia) December 27, 2021
குவாலியர் கிழக்கு தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏ சதிஷ் சிகர்வருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு மேடையில் இரண்டாம் வரிசையில் இரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தனக்கு முன் வரிசையில் நாற்காலி கொடுக்காததால் அதிருப்தி அடைந்த அவர், மாவட்ட நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.
பின்னர் அவர் மேடையில் இருந்து கீழே இறங்கிய அவரை நிர்வாகத்தினர் சமரசம் செய்ய முயற்சித்த போதும் அவர் சமாதானம் அடையாமல் கூட்டத்தை விட்டு வெளியேறிச் சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அப்படியே உட்கார்ந்து இருந்தார் முதல்வர்.
அதன் பின்னர் நாற்காலிக்கு சண்டைபோட்ட அந்த எம்எல்ஏவை சமரசம் செய்து மேடைக்கு அழைத்து வந்தனர். அதன்பின்னர் தொடர்ந்து அவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். மேடையில் நடந்த இந்த நாற்காலி சண்டை வீடியோவாகி வைரலாகி வருகிறது.