பாஜக ஏன் அடிக்கடி போராட்டம் நடத்துகிறது? அதிமுக ஏன் போராட்டமே நடத்துவதில்லை?

 
su

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை பின்பற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்து குற்றம்சாட்டி வருவது குறித்து செய்தியாளர்கள் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜுவிடம் கேள்வி எழுப்பினர்.   மேலும் ,  பாஜகவினர் அடிக்கடி போராட்டம் நடத்திக்கொண்டு பரபரப்பாக இயங்கி வரும் நிலையில் எந்த போராட்டமும் நடத்தாமல் அதிமுக ஏன் அமைதியாக இருக்கிறது? என்றும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 அதிமுக அமைப்பு தேர்தலுக்காக கட்சி  மதுரை கட்சி நிர்வாகிகளிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன .  இதற்காக மதுரையில் ஒரு தனியார் மண்டபத்தில் நடந்த இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ,  முன்னாள் அமைச்சர் வளர்மதி,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

s

 அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய அந்த கேள்விகளுக்கு தான் செல்லூர் ராஜு பதிலளித்தார்.   அதிமுக கூட்டணி தர்மத்தை கடைப் பிடிக்கவில்லை என்று ராமதாஸ் குற்றச்சாட்டுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்.   பாமக கூட்டணியில் இருந்து விலகி விட்டது.   அதனால் விலகிய பின்னர் அவர்கள் பேசும் கருத்துக்களுக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்றார்.

 மேலும்,  பாமகவினர் பேசுவதற்கு அதிமுக தலைவர்கள் பதில் சொல்வார்கள் என்றார்.

 பின்னர்,    பாஜக வளரும் கட்சி என்பதால் அடிக்கடி போராட்டம் நடத்துகிறது.  யார் போராட்டம் நடத்துகிறார்கள் என்பது பெரிது அல்ல.  என்ன காரணத்திற்காக போராட்டம் நடத்துகிறார்கள் என்பது முக்கியம்.   எந்த கட்சியாக இருந்தாலும் மக்களுடைய எண்ணங்களை பிரதிபலிக்கும் என்ற போராட்டமாக இருக்கவேண்டும்.  அடிக்கடி போராட்டம் நடத்தி மக்களை தொந்தரவு செய்ய அதிமுக விரும்பவில்லை.  அதனால் தான் அடிக்கடி போராட்டம் நடத்தவில்லை என்று தெரிவித்தார்.