அதிமுக தேர்தலை நிறுத்தக்கோரி தமிழகம் முழுவதும் பாயும் வழக்குகள்
அதிமுக உட்கட்சி தேர்தலை நிறுத்தக்கோரி தமிழகம் முழுவதும் வழக்குகள் பதிவாகி வருகின்றன. இதனால் தலைமைக்கழகம் அதிர்ந்து போயிருக்கிறது.
அதிமுக உட்கட்சித்தேர்தல் வரும் 7 ஆம் தேதி நடைபெறுகிறது என்றும், அதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் நடக்கிறது எனவும் அறிவிப்பு வெளியானது. ஆனால், வாக்களார்கள் பட்டியல் வெளியிடப்படவில்லையே. பின்னர் எப்படி தேர்தல் நடத்துவார்கள்? என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. யாரும் வாக்களிக்காமல் கடைசியில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்க திட்டமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

இதனால், அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி, இந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். இதே போல், தேர்தலை நிறுத்தக்கோரி, தமிழகம் முழுவதிலும் அதிமுகவினர், கீழ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
கே.சி.பழனிச்சாமி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது. அவசர மனுவாக எடுத்துக்கொண்டு விசாரிக்கப்பட இருக்கிறது. இதன்பின்னர் தமிழகம் முழுவதிலும் வழக்குகள் பதிவாகி அதிமுக உட்கட்சி தேர்தல் குழப்பங்களை பூதாகரமாக வெடிக்க செய்திருக்கிறது.
காவிரி மேலாண்மை விவகாரம் குறித்து ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு குழுவிடம் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சையாகக் கருத்து தெரிவித்ததால்தான் கே.சி.பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்.


