கடைசி நேரத்தில் முதல்வரின் பயணம் ரத்தானது ஏன்?

 
ச

இரண்டு நாள் பயணமாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் நேற்று தமிழகம் வந்திருந்தார்.  ஹைதராபாத்தில் இருந்து நேற்று திருச்சிக்கு வந்த சந்திரசேகரராவ் ஸ்ரீரங்கம் கோவிலில் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு சென்னை திரும்பினார்.

ச்சா

 சென்னை திரும்பியதும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் குடும்பத்தினருடன் தங்கியிருந்தார்.  இன்று மாலையில் தமிழக முதல்வர் மு .க. ஸ்டாலினை சந்திக்க அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.  இதற்காக  அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தார்.

திட்டமிட்டபடி தமிழக முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் இன்று மாலையில் குடும்பத்தினருடன் சென்று சந்தித்தார் சந்திரசேகரராவ்.   சந்திரசேகரராவுக்கு பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஸ்டாலின்.  பின்னர் முதல்வர் இல்லத்தில் சந்திரசேகரராவ் -ஸ்டாலின் இருவரும் ஆலோசனை நடத்தினார்கள்.  இந்த சந்திப்பில் தெலுங்கானா தொழில்துறை அமைச்சர் கே. டி. ராமராவ் மற்றும் இரு மாநில முதலமைச்சர்களின் குடும்பத்தினரும் இடம்பெற்றிருந்தனர்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு நீடித்திருக்கிறது. 

ட்ட்

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெலுங்கானா -முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினர்.  இந்த சந்திப்பு முடிந்த பின்னர்,  சந்திரசேகரராவ் ஹைதராபாத் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக சென்னை விமான நிலையம் வரைக்கும் அவர் செல்லும் சாலை வழி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

 விமான நிலையத்திலும் சந்திரசேகரராவ் ஹைதராபாத் செல்வதற்கான தனி விமானம் புறப்படுவதற்கு தயார் நிலையில் இருந்தது.  தெலுங்கானா மாநில அதிகாரிகள் பலரும் சந்திரசேகர ராவின் வருகைக்காக சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர்.

ட்ட்ட்

 இந்த நிலையில் கடைசி நேரத்தில் திடீர் என்று சந்திரசேகர ராவின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.  கடைசி நேரத்தில் திடீரென்று அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து தகவல் எதுவும் வெளிவரவில்லை.