2011ல் ஜெ., எடுத்த முடிவை நாம் எடுக்கலாமா? ஸ்டாலின் ஆலோசனை

 
ச்ட்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த டிசம்பர் 18ஆம் தேதியன்று நடந்த திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் குறித்து பேசிய ஸ்டாலின்,  மாவட்ட செயலாளர்களுக்கு சில முக்கியமான தகவல்களை சொல்லி இருக்கிறார்.

 ஊரக உள்ளாட்சி தேர்தலை போலவே கூட்டணி கட்சியினருக்கு உரிய இடங்களை மாவட்ட அளவில் மாவட்ட செயலாளர்கள் நீங்களே பேசி முடிவு எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தெரிவித்திருக்கிறார்.  ஆனால் தற்போது முதல்வரின் முடிவில் மாற்றம் இருப்பதாக தகவல்.  திமுக தனித்து போட்டியிடலாமா அவர் முடிவெடுத்து அது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்.

ட்ச்

 திமுகவின்  பொதுச்செயலாளர் துரைமுருகன் மற்றும் துணை பொதுச்செயலாளர்கள் உள்ளிட்டோரிடம் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறாராம்.  கடந்த 2011 ஆம் ஆண்டில் அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தபோது ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளை எல்லாம் தவிர்த்துவிட்டு தனித்துப் போட்டியிட்டார்.  திமுகவும் அந்த தேர்தலில் தனித்து தான் போட்டியிட்டது.

 திமுக ஆட்சி அமைத்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டது.  கட்சியினருக்கு பெரிதாக எதையும் நம்மால் செய்ய முடியவில்லை.  அதனால் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்து நின்று அனைத்து இடங்களையும் திமுகவினரை போட்டியிட முடிவு எடுத்தால் என்ன என்று ஆலோசனை செய்து வருகிறாராம். 

 அதே நேரம் அப்படி ஒருவேளை கூட்டணி கட்சியினர் போட்டியிட வேண்டும் என்றால் , திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடட்டும்.  இதற்கு அவர்கள் சம்மதிப்பார்களா?  மேலும் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா? என்பது குறித்து  எல்லாம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறாராம் ஸ்டாலின்.