ராஜேந்திரபாலாஜிக்கு உதவும் கருப்பு ஆடுகள்

 
ப்

 முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ரவீந்திரன் உள்ளிட்டோருக்கு ஆவின் மற்றும் அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மூன்று கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து விட்டதாக புகார்கள் எழுந்தன. 

ர்

 விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இருந்தால்,   இந்த வழக்கில்  கைதாகாமல் இருக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார் ராஜேந்திரபாலாஜி.  அவரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனுவை அவசர மனுவாக கருதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

 இதற்கிடையில் ராஜேந்திரபாலாஜியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.  முதலில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.  அதன் பின்னர் இரண்டு  படைகளும் அடுத்ததாக இரண்டு தனிப்படைகள் என மொத்தம் 8  தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. 

 கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அவர் பதுங்கி இருக்கலாம் என்று போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  டெல்லியில் அவர் பதுங்கி இருப்பதாகவும் அவரை நெருங்கி விட்டோம் விரைவில் பிடித்து விடுவோம் என்று கடந்த வாரத்தில் தகவல் வெளியானது.  ஆனால் இன்றைக்கு வரைக்கும் ராஜேந்திரபாலாஜியை போலீசாரால் நெருங்க முடியவில்லை.  அவர் அடிக்கடி சிம்கார்டை மாற்றிக் கொண்டு வழக்கறிஞர்களுடன் பேசி வருவதாக தெரிய வந்திருக்கிறது போலீசாருக்கு.

ப்

 ராஜேந்திர பாலாஜி இன்னும் கைது செய்யாமல் இருப்பது தமிழக காவல்துறைக்கு அழகல்ல என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒருபக்கம் விமர்சித்திருக்கிறார்.   அதேநேரம் அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து,  அவசர நிலை காலம் மாதிரி இப்படி ராஜேந்திரபாலாஜி கைது செய்தே ஆக வேண்டும் என்கிற நிலை தேவையற்றது.  ஏன் இந்த அளவுக்கு தீவிரமாக ராஜேந்திரபாலாஜியை கைது செய்ய தீவிரம் காட்டுகிறது அரசு என்று முறையிட்டுள்ளனர்.

 இந்தநிலையில் ராஜேந்திர பாலாஜியை இன்னும் போலீசார் இருக்க முடியாததால் அவருக்கு காவல் துறையில் இருந்து தகவல் கசிகிறது என்ற சந்தேகம் உயரதிகாரிகளுக்கு எழுந்திருக்கிறது.  இதை கண்டறிந்து விட்டால் விரைவில் ராஜேந்திரபாலாஜி சிக்கி விடுவார் என்றும் போலீஸ் உயரதிகாரிகள் தரப்பின் எண்ணமாக இருக்கிறதாம்.