ஆளுநருக்கு எதிராக கருப்புகொடி போராட்டம்... அமைச்சர் பொன்முடி பதில்
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அப்போதைய ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக திமுக கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டது. இந்நிலையில் தற்போது ஆளுநர் , துணைவேந்தர்கள் உடன் ஆலோசனையில் ஈடுபட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஆளுநர் கல்விதுறை குறித்து தான் கேட்டிருக்கிறார் அவ்வளவுதான். மற்றபடி ஆளுநரின் நடவடிக்கை வர வர மாறும் என்று தெரிவித்து இருக்கிறார் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி.

தஞ்சாவூர் அடுத்த வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவர் மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார் .
பின்னர் செய்தியாளர்கள் பேசியபோதுதான் மேற்கண்ட கேள்விக்கு பதில் அளித்தார். அதன் பின்னர், மாணவர்கள் மூன்றாவது மொழி படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று தெரிவித்த பொன்முடி, ஆனால் மூன்றாவது மொழி விருப்ப பாடமாக இருக்க வேண்டுமே தவிர கட்டாய பாடமாக இருக்கவேண்டும் இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.
ஆளுநரின் நடவடிக்கை இனிவரும் காலங்களில் மாறும் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் பொன்முடி கருத்து பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


