பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி.. வைகோ பரபரப்பு

 
v

 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  மதிமுக அலுவலகமான தாயகத்தில் நடந்த இந்த சந்திப்பில் பேசியபோது,   திமுகவுடன் எடுத்த கூட்டணி நிலைபாட்டை மக்கள் அங்கீகரிக்கிறார்கள்.  முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்று நீதிமன்றம் கூட பாராட்டி இருக்கிறது என்று பெருமிதத்துடன் சொன்னார்.

m

 தொடர்ந்து பேசிய அவரிடம்,   பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.  அவருக்கு கருப்பு கொடி காட்டப்படுமா?  என்ற கேள்விக்கு,    திமுக கூட்டணியில் இருக்கிறோம்.  கூட்டணி கட்சியுடன் திமுக இதில் முடிவு எடுக்கும் என்று நழுவினார்.

 தொடர்ந்து அவர் பேசியபோது வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டியது அவசியம் என்றவர்,   பாஜகவின் நாடாளுமன்றத்தில் ஜனநாயகம் இல்லை.  பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு கூட வருவதில்லை என்று கடுமையாக விமரிசித்தவரிடம்,

r

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் அவசர நிலை நிலவுவதாக என்று அதிமுகவினர் ஆளுநரை சந்தித்து முறையிட்டது குறித்த கேள்வி எழுந்தபோது , அதிமுக நிர்வாகிகள் பேசுவதில் பல முரண்கள் இருக்கிறது.   முன்னாள் அமைச்சர்  ராஜேந்திர பாலாஜியை இன்னும் கைது செய்யாமல் இருப்பது காவல்துறை அழகில்லை என்றார்.