கருப்பு சிவப்பு கலரும் சீமான் போட்டிருக்கும் செருப்பும் - டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

 
tw tw

கண்ட நாயெல்லாம் சங்கின்னு சொல்லுது.  யாருடா  சங்கி.  திமுகதாண்டா உண்மையான சங்கி என்று தன்னைப்பற்றி திமுகவினர் விமர்சனம் செய்வதற்கு எதிராக கொதித்தெழுந்தார் சீமான்.  அண்மையில் சென்னை அம்பத்தூரில் கட்சி சார்பில்  நடந்த நிகழ்வில் மேடையில் பேசியபோது அவர் மேலும்,  சொங்கிப்பயளுகளா? யார பார்த்து யாரடா சங்கின்னு சொல்லுறீங்க.  செருப்பு இருக்கு பாருங்க... என்று சொல்லிக்கொண்டே காலில் கிடந்த செருப்பை கழற்றி தூக்கிக்காட்டி எச்சரித்தார்.

ss

அந்த செருப்பை அவர் எந்த அர்த்தத்தில் கழற்றி தூக்கி காட்டினாரோ தெரியவில்லை.  ஆனால் டுவிட்டரில் அவரது தொண்டர்கள்,  வேறு விதமாக பதிவிட்டு வருகிறார்கள். #கதறும்_திமுக என்ற ஹேஷ்டேக்கு பதிவிட்டு டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

se

சீமான் தூக்கி காட்டிய செருப்பு கருப்பு சிவப்பு நிறம்.  அந்த செருப்பைத்தான் அவர் காலில் போட்டிருக்கிறார்.  தற்போது மட்டுமல்ல. அவர் 2019ம் ஆண்டே இந்த செருப்பை போட்டிருக்கிறார் என்பதற்கான ஆதாரத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.

எப்பா டேய்.. கையில் தூக்கி காமிச்சது வேனா இன்னிக்கார்க்கும்.. திராவிடத்த காலுக்கு கீழ போட்டு நாள் ஆச்சி...என்கிறார் நெல்லை செல்வின். இந்த செருப்பு கலர் ஏதோ கட்சி கொடி குறியீடாக இருக்குமோ? நமக்கு எதுக்கு வம்பு? பேயிக்கும் பேயிக்கும் சண்டை என்கிறார் கொங்கு சித்தர் என்பவர்.  

se

திராவிட செருப்பு என்றும், அதை சீமான் காலில் போட்டிருப்பதாகவும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.