டிஆர்பி ராஜாவின் குளறுபடி -ஆதாரத்துடன் பாஜக பதிலடி

 
trp

 திமுகவின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஐடி விங் செயலாளருமான டிஆர்பி ராஜா குடியரசு தின விழா அணிவகுப்பு குறித்து பதிவிட்டுள்ள குளறுபடி பதிவிற்கு தமிழக பாஜகவின் ஊடகப்பிரிவு தலைவர் நிர்மல்குமார் பதிலடி கொடுத்திருக்கிறார்.


 குடியரசு தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டதாக ஒரு ஊர்தியின் புகைப்படத்தை வெளியிட்ட டிஆர்பி ராஜா,   ‘’ இது எந்த மாநிலத்தின் சுதந்திரப் போராட்ட வீரர்?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

 ராஜாவின் இந்த பதிவை பகிர்ந்த பலரும் கிண்டல் செய்து வந்த நிலையில்,   பாஜக ஊடகப் பிரிவு தலைவர் நிர்மல்குமார் டிஆர்பி ராஜாவின் அந்த  பதிவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். 

 கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியில் நடத்தப்பட்ட குடியரசு தின விழாவில் பங்கேற்ற கர்நாடக மாநில அலங்கார ஊர்தி குறித்த புகைப்படத்தை தற்போது பொய்யாக பரப்பி வருகிறார் டிஆர்பி ராஜா என்று அது தொடர்பான செய்தியின் ஸ்கிரீன்ஷாட் ஆதாரத்துடன் பகிர்ந்துள்ளார்.


தந்தையின் செல்வாக்கிலும் பணத்திலும் மிக உயரமான வளர்ந்த டிஆர்பி ராஜாவிற்கு அறிவு வளரவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்.  2013 காங்கிரஸ் (சீதாராமையா + மன்மோகன்) ஆட்சியில் அணிவகுத்த கர்நாடக வாகனத்தை இப்பொழுது பொய்யாக செய்தி பரப்பும் முட்டாள்கள் என்று விமர்சித்துள்ளார் நிர்மல்குமார்.

 இதையடுத்து திமுக எம்எல்ஏ டிஆர்பி ராஜாவை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு பதிலாக திமுக ஐடி விங் செயலாளர் பதவியை ஏற்றுக்கொண்ட டிஆர்பி ராஜா இப்படி சர்ச்சையில் சிக்கி இருப்பது பெரும்  சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.