மூன்று மணி நேரத்தில் அவசரமாக அறிவித்தது ஏன்? முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக கேள்வி

 
st

மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால் விஷம் குடித்து இறந்த சிறுமி  லாவண்யாவின் தந்தை தீவிர திமுக உறுப்பினர். திமுக உறுப்பினர் அட்டையை தன் சட்டைப்பையில் வைத்திருப்பவர்.  பாஜக சொன்னால் மத அரசியல் செய்வதாக சொல்லும் ஸ்டாலின் அவர்களே, உங்கள் கட்சி தொண்டரின் மகளின் உயிர் பறிக்கக்கப் பட்டிருக்கிறது. ஆனால், ஒரு அனுதாபம் இல்லை. கண்டனம் இல்லை.  ஏன்? திமுக தொண்டனை விட, அந்த பெண்ணின் மரண வாக்குமூலத்தை விட,  சிறுபான்மை  ஓட்டு தான் முக்கியமா? என்று கேட்கிறார் தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

அவர் மேலும்,  லாவண்யாவின் பெற்றோர் அளித்த புகார் மீது மூன்று நாட்களில்  குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறோம் என 20/01/2022 அன்று தஞ்சாவூர் மாவட்ட கண்காணிப்பாளர் ரவாளி பிரியா அவர்கள் கூறிய நிலையில், மூன்றே மணி நேரத்தில் தூய ஹிருதய பள்ளியில் மதமாற்றம் நடக்கவில்லை என்று அறிவித்தது ஏன்? என்று கேட்கிறார்.

nn

 தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி லாவண்யாவின் தற்கொலை விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்திருக்கிறது.   மாணவியின் தற்கொலைக்கு காரணம்  மதம் மாற கட்டாயப்படுத்தியதால் தான் தற்கொலை என்று ஒருபக்கம் தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மாணவியை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால் தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களும் வெளியாகி வருகின்றன. 

 இதற்கிடையே மருத்துவமனையில்  மரண வாக்குமூலத்தில்,  கடந்த 5 வருடமாக ஹாஸ்டலில் தங்கி படித்து வருகிறேன்.  - ஹாஸ்டல் வார்டன்  என்னைமட்டும் கணக்கு வழக்குகளை பார்க்கச் சொல்லுவார்.  இதனால் விடுமுறைக்கு கூட என்னை வீட்டிற்கு அனுப்ப மாட்டார்.  இதனால் விரக்தி அடைந்த நான் கடந்த 9ஆம் தேதியன்று பூச்சி மருந்து எடுத்துக் குடித்துவிட்டேன்.   உடம்பு சரியில்லை என்று ஊருக்கு சென்றேன்.  வாய், நாக்கு தொண்டை எரிச்சல் அதிகமாக இருந்ததால் மருந்து குடித்த விஷயத்தைச் சொன்னேன்.   ஹாஸ்டல் வார்டன் என்னை தொடர்ந்து கணக்கு வழக்குகளை பார்க்க சொன்னதால் தான் இந்த முடிவுக்கு வந்தேன் என்று மரண வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்துதான் நாராயணன் திருப்பதி இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார்.