உதயநிதி விவகாரத்தில் பாஜக அடித்த கமெண்ட் -கொந்தளிக்கும் திமுகவினர்

 
u

உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக வேண்டும் என்பது ஒட்டுமொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது  என்று அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்னதற்கு தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பதிலடி கொடுத்திருக்கிறார்.

ua

அவர்,  திமுகவை சேர்ந்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்று நீங்கள் நினைத்து அந்த அடிப்படையில் பேசியுள்ளீர்கள் என்றும்,  திமுக ஆட்சியிலேயே இருக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த தமிழர்களின் விருப்பமாக உள்ளது என்று மற்றவர்கள் கூறுகிறார்கள் எனவும் கமெண்ட் அடித்திருக்கிறார் .

நாராயணன் திருப்பதியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு எதிராக திமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.   தமிழ்நாட்டு தமிழர்களின் நலனுக்காக திமுக ஆட்சியில் இருக்க வேண்டும் என்று தான், பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வரை மக்கள் வாக்களித்து வருகின்றனர்.  தமிழ்நாட்டு பாஜக குறிப்பிட்ட சமூகத்துக்கான கட்சி என்பதால் ஒத்த ஓட்டு நிலையிலயே தமிழர்கள் வைத்து உள்ளனர் என்றும், 

n

அந்த மற்றவர்கள் யாரு? நாங்கதான்னு சொல்லக்கூட பயம் இருக்குல்ல நாராயணா?அந்த பயம் தான் நாங்க என்றும் சொல்கிறார்கள்.  

நீங்களும் அந்த 4 MLAதான் ஒட்டு மொத்த தமிழ்நாடு என்று நினைத்து விட்டீர்கள் போலும்....அப்டினா பாஜகவை பற்றி என்ன நினைக்குறாங்க என்று கொஞ்சம் சொல்லுங்க நாராயணன் , இந்திய நாட்டில் உள்ள அநேக மக்கள் பாஜகவிற்கு எதிராக தானே வாக்களித்து உள்ளார்களே,  அப்பறம் எப்படி நாராயணா 122 MLA வை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள்? என்றும் கேட்டும் திமுகவினர் வறுத்தெடுத்து வருகின்றனர்.