’’என் வாயை எப்படியாவது மூடப்பார்க்கிறார்கள்’’

 
அச்ப்

ஜெயலலிதா பல்வேறு சுதந்திரங்களை கொடுத்திருந்தார் ஐ.டி. பிரிவுக்கு.   அப்படி ஒரு முக்கியத்துவம் தற்போது கொடுக்கப்படவில்லை.  நான் தேர்தலுக்கு முன்பே தலைமைக்கு பல விஷயங்களை எடுத்துச் சொன்னேன்.  ஆனால் , தலைமை அதை காதில் வாங்கவே இல்லை.  நிலைமை சரி இல்லை,  நாம் தோற்றுவிடும் நிலையில் இருக்கிறோம் என்று தொகுதியின் நிலவரத்தை எடுத்துச் சொன்னேன்.  எதையும் அவர்கள் கேட்டுக் கொள்ளவில்லை.  தற்போதைய அதிமுகவின் தலைமைக்கு தொலைநோக்கு பார்வையும் இல்லை.  அதனால் இனியும் இங்கே இருப்பது சரியில்லை.  அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை என்பதை உணர்த்த பின்னர் தான் நான் வெளியேறுகிறேன் என்று சொல்லிவிட்டு அதிமுகவில் இருந்து விலகினார் அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு  செயலாளர் அஸ்பயர் சுவாமிநாதன்.

அச்

அதிமுகவில் இருந்த போது இவர்  ஓ.பன்னீர்செல்வத்துடன் தான் அதிகம் இணைந்து பணிபுரிந்துள்ளார்.  இந்த நிலையில், அதிமுகவில் செயற்குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி அன்வர்ராஜா திடீரென்று நீக்கப்பட்டது குறித்து, ’’பேசியே வளர்ந்த கட்சியாம்..கூட்டங்களில் பேச தடை. டிவியில் பேச தடை .  உள்அரங்குகளில் விவாதிக்க தடை, அடிக்க, உதைக்க பாய்வார்கள். தனக்கு கிடைத்துள்ள “அந்த டெல்லி தகவல்களை” செயற்குழுவில் பேசி, நெருக்கடியை ஏற்படுத்தி விட்டால்? அதற்கு தான் அன்வர் பாய் நீக்கமோ? அடுத்த wicket யாருனு தெரியுமா? என்று கேட்டு கொளுத்தி போட்டிருந்தார்.

அடுத்த விக்கெட் யாருனு தெரியுமா? என்று அஸ்பயர் சுவாமிநாதன் சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில்,  ‘’அதிமுகவின் அடுத்த விக்கெட் ஓபிஎஸ்தான்’’என்று  சொல்லி அதிரவைத்தார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஸ்யாம்.

அதன்பின்னர் என்ன நெருக்கடி நேர்ந்ததோ,  ’’மக்களை கவர வேண்டும் என்பதற்காக அல்லாமல்,  துரத்த வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டீர்கள். நீங்கள் மீண்டும் திசைதிருப்பப்படுகிறீர்கள்’’என்று சூசகமாக சொல்லியிருந்தார்.

அதன்பின்னரும் நெருக்கடி அதிகமானதோ என்னவோ,  ‘’என் வாயை எப்பபடியாவது மூடவேண்டும்! என் பெயரை damage செய்யவேண்டு்ம்! இது தான் குறிக்கோள். அதற்கு ஒரே வழி character assassination … media மூலம் செய்ய அடுத்த கட்ட முயர்ச்சி… all the best… I am UNSTOPPABLE’’ என்று குறிப்பிட்டிருக்கிறார் அஸ்பயர் சுவாமிநாதன்.