சசிகலாவுக்கு ஆறுகுட்டி ஆதரவு

 
அ

 நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று அதிமுக ஒவ்வொரு தேர்தலிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நிலையில் சசிகலா கட்சிக்கு தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன.

 இந்த நிலையில் அதிமுக தலைமையை சசிகலா ஏற்க வேண்டும்,   டிடிவி தினகரன் வழிநடத்த வேண்டும் என்று முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி தெரிவித்திருக்கிறார்.

அரு

 அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஆறு குட்டி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.   அப்போது அவர்,    ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் கட்சியை நடத்திக் கொண்டிருந்தார்கள்.   தமிழக மக்கள் அதிமுகவை அதிகப்படியாக விரும்பாமல் வாக்களித்திருக்கிறார்கள்.

 தலைமை சரியில்லாத காரணத்தால் இந்த இயக்கம் தோன்றி இருக்கிறது.   நாலு வருடத்திற்கு முன்பு உள்ளாட்சித் தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக வென்று இருக்கும்.   அதை விட்டு விட்டார்கள்.  சசிகலாவும் தினகரனும் இணைந்து கட்சியை வழி நடத்தினால் தான் அதிமுக தொய்வில்லாமல் வளரும் என்றார்.

s

தொடர்ந்து பேசிய ஆறுகுட்டி,  பெரியகுளத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் சசிகலாவை கட்சியில். இணைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.   தினகரனும் இணைந்து அதிமுகவை வழிநடத்த வேண்டும்.   கடந்த இரண்டு முறை ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்தால்.   ஆனால் இம்முறை எனக்கு வாய்ப்பு தரவில்லை.   அதற்காக என்னுடைய இந்தக் கருத்தில் எந்த சுயநலமும் இல்லை என்று தெரிவித்தார்.