மாஜி அமைச்சருக்கு கைது வாரண்ட்

 
y

 உத்தரபிரதேசத்தில் பிப்ரவரி 7ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது.   அம் மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் யோகி அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் இரண்டு முக்கிய அமைச்சர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். 

 சிறுபான்மையினருக்கான நலனில் பாஜக அரசு அக்கறை காட்டவில்லை என்று கூறி நேற்று துணை முதல்வராக இருந்த  எஸ்.பி.மவுரியா மற்றும் எம்எல்ஏக்கள் நாலு பேர் பதவி விலகி இருந்தனர்.   இந்தநிலையில் இன்று வனத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் தாராசிங் சவுகான்.

y

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்து இரு முக்கிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்திருப்பது பாஜக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 இந்த நிலையில் யோகி அமைச்சரவையில் இருந்து விலகிய  எஸ்.,பி.மவுரியா மீது கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது .  துணை முதல்வராகவும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்த சுவாமி பிரசாத் மாவுரியா தனது பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார் . அதுமட்டுமல்லாமல் சமாஜ்வாதி கட்சியில் இணைய உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

 எஸ்பி மவுரியா வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு இடப்பட்டிருந்தது.  அவர் ஆஜராகாததால் கைது வாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டிருக்கிறது சுல்தான்பூர் நீதிமன்றம்.