செயற்குழுவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தப்போகும் அன்வர்ராஜா

 
ad

கடந்த 24 ஆம் தேதி அன்று நடந்த மா.செ. கூட்டத்தில் அன்வர்ராஜா விவகாரம் பூதாகரமாக வெடித்தது.  முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவரை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்.  விவகாரம் பெரிதாக ஆனதும் அன்வர்ராஜா மன்னிப்பு கேட்டிருக்கிறார்.  ஆனாலும் இன்றைக்கு அதிமுக செயற்குழு கூடுகின்ற நிலையில் முன்னதாக நேற்று அன்வர்ராஜாவை அதிமுகவிலிருந்து நீக்கியிருக்கிறார்கள்.

 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கியதிலிருந்து அதிமுகவில் இருந்து வருபவர் அன்வர்ராஜா.  முன்னாள் அமைச்சரும்,  முன்னாள் எம்பியுமான இவர் சசிகலாவுக்கு ஆதரவாக நிற்பதால் தான் அதிமுகவிற்கு பெரும் தலைவலியாக உருவாகி இருந்தது.   குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும்,  அவரது ஆதரவாளர்களுக்குத் தான்  கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

aad

 ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிச்சாமி இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதாகவும்,  இருவருக்கும் இடையே நீயா நானா போட்டி இருப்பதாகவும் வெளியே தகவல் கசிந்து வந்தாலும்,  கட்சியில் இருக்கும் மூத்த நிர்வாகி ஒருவரே  இதை வெளிப்படையாகச் சொல்ல பெரும் சலசலப்பு ஏற்பட்டது.  மேலும் சசிகலாவை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அவரை அதிமுகவிற்குல் கொண்டு வரவேண்டும்.  கொண்டு வந்து விட்டால் வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று அன்வர்ராஜா சொல்ல,  எடப்பாடி பழனிச்சாமிக்கும்,  ஆதரவாளர்களுக்கும் கோபம் தலைக்கு ஏறி இருக்கிறது ,

இந்த நிலையில்,  சசிகலாவுக்கு ஆதரவாக அன்வர்ராஜா  பேசி வருவதால்,   எடப்பாடி பழனிச்சாமி உங்களை அடிக்க ஆள் அனுப்பி இருக்கிறார் என்று ஒருவர் போனில் சொல்ல ,  பழனிச்சாமி தன்னை இன்னொரு எம்.ஜி.ஆர். என்று  நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று அன்வர்ராஜா சொல்ல அதை பதிவு செய்து அந்த ஆடியோவை வெளியிட,  எடப்பாடி பழனிச்சாமியை  ஒருமையில்  பேசிவிட்டார் அன்வர்ராஜா என்று கட்சிக்குள் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

 பழனிச்சாமி தன்னை இன்னொரு எம்ஜிஆர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று தான் சொல்ல வந்தேன்.  ஆனால் டங் சிலிப் ஆகி கொண்டிருக்கிறான் என்று வந்துவிட்டது என்று அன்வர் ராஜா விளக்கம் சொன்னாலும்,  அதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. 

a

 கடந்த 24ஆம் தேதியன்று நடந்த  மா.செ.க்கள் கூட்டத்தில் அன்வர்ராஜாவை ஆளாளுக்கு வறுத்தெடுத்து இருக்கிறார்கள்.  உச்சகட்டமாக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அன்வர் ராஜாவை அடிக்கப் பாய்ந்திருக்கிறார்.  பின்னர் அன்வர்ராஜா மன்னிப்பு கேட்டிருக்கிறார்.   இந்த நிலையில் மீண்டும் ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வரும் அன்வர்ராஜா,   ஓபிஎஸ்- இபிஎஸ் இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருக்கிறது என்றும் சசிகலாவை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

மேலும்,  அதிமுகவில் எல்லோரும் சசிகலா காலில் விழுந்து கிடந்தவர்கள்தான்.  பதவி வாங்கியதும் எடப்பாடி பழனிச்சாமியும் சசிகலா காலில் விழுந்து ஆசி வாங்கினார் என்று சொல்லி சலசலப்பை அதிகப்படுத்தினார்.

 இதனால் இன்றைக்கு அதிமுக செயற்குழு கூட இருக்கும் நிலையில்,  நேற்று அன்வர்ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.  மா.செக்கள் கூட்டத்தில் அன்வர்ராஜா  விவகாரம் பூதாகரமாக வெடித்தது.   தற்போது  அன்வர்ராஜா நீக்கப்பட்டாலும் சசிகலா குறித்த விவகாரத்தினால் தான் அன்வர்ராஜா நீக்கப்பட்டு இருக்கிறார்.   அப்படி இருக்கும்போது இன்றைக்கு நடைபெற இருக்கும் அதிமுக செயற்குழுவில் அன்வர்ராஜா  விவகாரம் எதிரொலிக்குமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

மா.செக்கள் கூட்டத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளை போலவே செயற்குழுவிலும் அன்வர்ராஜாஅதிர்வலைகளை ஏற்படுத்தப்போகிறார் என்கிறது அதிமுக வட்டாரம்.