உட்கார்ந்து பேசி திமுகவை ஒரு முடிவுக்கு வரச்சொன்ன அண்ணாமலை

 
an

திமுகவினர் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை .  தூத்துக்குடி விமான நிலையத்தில் பெட்ரோல் விலை குறைப்பு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குத் தான் அவர் இப்படி ஒரு பதிலைச் சொன்னார்.

 பெட்ரோல்  விலையை குறைக்க பெட்ரோல்  விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது.  அந்தத் தேர்தல் அறிக்கை தயாரித்த குழுவின் தலைவராக இருந்தவர் டிஆர். பாலு.   ஆனால்  இப்போதும் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்.  ஆனால் தமிழக நிதியமைச்சர்  பெட்ரோல் டவிலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரக்கூடாது என்று சொல்கிறார்.

p

தேர்தலுக்கு முன்பு வரைக்கும் திமுகவின் நிலைப்பாடு இதுதான் என்பதால்தான்,  அப்போது திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் சொல்லித்தான் திமுகவின் தேர்தல் அறிக்கையில்,  பெட்ரோல்  விலை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும்  என்பதை இடம்பெறச்செய்தேன் என்று டிஆர். பாலு சொல்லி வருகிறார்.   ஆனால் தேர்தலுக்கு பின்னர், ஒரே கட்சிக்குள் இருந்து கொண்டு அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு ஒன்றைச் சொல்லுகிறார்,  தமிழக நிதி அமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் ஒன்றைச் சொல்லுகிறார். 

t

இந்த நிலையில்தான் அண்ணாமலையில் செய்தியாளர்கள் அது குறித்துகேட்க,   திமுகவினர் உட்கார்ந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  ஒரு எம்பி பெட்ரோல் விலையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறார் .  ஒரு  நிதியமைச்சர் பெட்ரோல் விலையை ஜிஎஸ்டிக்குள்  கொண்டு வரக்கூடாது என்று சொல்கிறார். இதைப் பற்றி கேட்டால் கட்சியின் கருத்து வேறு ஆட்சியின் கருத்து வேறு என்று சொல்கிறார்கள்.   இவர்கள் முதலில் அனைவரும் உட்கார்ந்து பேசி பெட்ரோல் விலையை பாஜக சொல்வதுபோல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவார்களா மாட்டார்களா என்று சொன்னால்தான் தீர்வு ஏற்படும் என்றார்.