அறைக்குள் நடந்ததை வெளியே சொல்ல மறுத்த அண்ணாமலை

 
a

ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக -பாஜக கூட்டணி இணைந்து போட்டியிட்ட நிலையில்,  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் நிலுவையில் இருக்கிறது.   நேற்று 4 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டவில்லை.

 இந்த நிலையில் இன்று சென்னை பாஜக தலைமை அலுவலகத்திற்கு சென்று,  உள்ளாட்சி தேர்தல் பொறுப்பாளரான நிர்மல்குமார் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.   அதன் பின்னர் மாணவி லாவண்யாவின் மரணத்தை அடுத்து அவரது குடும்பத்தினரை சந்தித்து பாஜக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்குவதற்காக அரியலூர் சென்றிருந்த அண்ணாமலை,  பிற்பகலில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் .

oe

அப்போது அதிமுக கூட்டணி குறித்து எழுப்பிய கேள்விக்கு,   உள்ளாட்சித் தேர்தல் என்பதால் கட்சியின் பல நிர்வாகிகளும் போட்டியிட விரும்புகிறார்கள். அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது.   இதனால்தான் அதிமுக -பாஜக இடையே இடப்பங்கீடு குறித்து முடிவெடுப்பதில் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்ல,   எத்தனை சதவீத இடங்கள் கேட்டீர்கள் என்று கேள்வி கேட்க,    நாங்கள் எத்தனை சதவீத இடங்கள் கேட்டோம் என்பது பற்றி எல்லாம் அறைக்குள் நடந்ததை வெளியே சொல்ல முடியாது  என்றார்.

ஆனாலும் இன்று இரவுக்குள் ஏதோ ஒரு முடிவு எடுத்து விடுவோம் என்று சொன்னார்.   இன்று இரவு டெல்லி தலைமையிடம் பேசி கூட்டணி குறித்து ஒரு முடிவை எடுக்க இருக்கிறார் அண்ணாமலை என்று தெரிகிறது.