அண்ணாமலையை ஒரு மனுஷனாகவே கருதவில்லை -ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு

 
ர்ச்

 அவனெல்லாம் ஒரு தலைவனா என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை ஒருமையில் பேசியிருந்தார் அமைச்சர் காந்தி.   இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளரும் ராஜ்யசபா எம்பி மான ஆர். எஸ். பாரதி அண்ணாமலையை ஒரு மனுஷனாகவே  கருதவில்லை என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

 மத்திய இணையமைச்சர் எல் . முருகன்,   தமிழக பாஜக தலைவராக இருந்தபோது  வேலூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய போது,  முரசொலி பத்திரிக்கையின் மூலம் பத்திரிக்கையை ஸ்டாலினால் காட்ட முடியுமா? என்று பேசினார் .  மேலும் திமுக குறித்து அவர் கடுமையாக விமர்சித்தார்.

க

 இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.  பாரதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  முரசொலி அறக்கட்டளை குறித்தும் திமுகவினர் ஆதிதிராவிடர் மக்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் அவதூறாக பேசி இருக்கிறார்.  நான் முரசொலி பத்திரிக்கையின் மூலப் பத்திரிகையை காட்டியபோது மறுபரிசீலனை செய்தார்.  ஆனாலும் முருகன் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டிருக்கிறார் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

 எழும்பூர் நீதிமன்றத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணை துவங்குவதற்கு முன்னரே  முருகன்  எம்.பி. ஆகி விட்டார்.  அதனால் தற்போது வழக்கு எம்பி மட்டும் எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு வந்திருக்கிறது. 

இந்த வழக்கின் விசாரணையில் அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்கிறோம்.  சம்மனுக்கு பின் அவர் ஆஜராகிய பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என்கிறார் ஆர்.எஸ்.பாரதி.

அ

அவர் மேலும்,   பாஜகவிற்கு பயப்பட வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை  என்று தெரிவித்துள்ளார்.  அவரிடம்,  பாஜகவின் சமூக வலைத்தள ஆதரவாளர்கள் மீது அடுத்தடுத்து போடப்படும் வழக்குகளால் டிஜிபி என்பவர் பாஜகவுக்கும் டிஜிபியாக இருக்கவேண்டும்.  தமிழ்நாட்டுக்கு டிஜிபியாக வேண்டும்.  திமுகவுக்கு மட்டும் டிஜிபியாக இருக்கக்கூடாது .  அவர் சுதந்திரமாக இயங்க வில்லை என்றுதான் நினைக்கிறேன்.

  திமுக வேறு ஆட்களை வைத்துக்கொண்டு டிஜிபியை பெயருக்கு வைத்துக்கொண்டு இயங்க வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்று  கடுமையாக விமர்சித்திருந்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது,  அண்ணாமலையை ஒரு மனுஷனாகவே கருதவில்லை.  அண்ணாமலை தமிழக காவல்துறை அதிகாரிகள்,  டிஜிபி சைலேந்திரபாபு  ஆகியோரை  தவறாக பேசியிருக்கிறார்.  இதிலிருந்து அண்ணாமலை ஒழுக்கமான காவல்துறை அதிகாரி இல்லை என்பது தெரிய வருகிறது என்று தெரிவித்திருக்கிறார்.