பட்டைய போட்டு நல்லவன் மாதிரி நடிக்க வேண்டாம்; கடந்த காலம் எல்லோருக்கும் தெரியும் - அமைச்சரை விளாசிய அண்ணாமலை

 
k

 நெற்றியில் பட்டையை போட்டுக்கொண்டு குங்குமம் வைத்துக்கொண்டு நல்லவன் மாதிரி நடிக்க வேண்டாம்.  கடந்த காலம் எல்லோருக்கும் தெரியும் என்று அமைச்சர் பிகே சேகர்பாபு வை கடுமையாக தாக்கினார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.

பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் புதிதாக கட்டப்பட்ட கோயில் வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சி காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் அருகே உள்ள திருமண மண்டபத்தில் காணொளிக் காட்சியாக காட்டப்பட்டது.  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் சென்றிருந்தார்.  நிகழ்ச்சியை அவர் தொண்டர்களுடன் அமர்ந்து பார்வையிட்டார்.  

 அதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக டிஜிபி யை கடுமையாக தாக்கி பேசியதற்கு  இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பிகே சேகர்பாபு கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார் என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

k

 அதற்கு அண்ணாமலை,  ‘’ டிஜிபி என்றால் அவர் தமிழகத்தில் இருக்கக்கூடிய 8 கோடி மக்களுக்கும் டிஜிபியாக இருக்க வேண்டும்.  பாஜகவினருக்கும் அவர் டிஜிபியாக இருக்கவேண்டும் திமுகவினருக்கு மட்டுமே அவர் டிஜிபியாக இருக்கக்கூடாது என்பதுதான் எங்களின் கருத்து .   எப்போது டிஜிபி அவர்கள் தவறு செய்திருக்கும் திமுகவினர் மீது எல்லாம் எப்ஐஆர் போடுகிறார் அப்போதே முதலில் அவரை வரவேற்பது பாஜகவினராகத்தான் இருக்கும்.

 என்னைப் பற்றி பேசியிருக்கும் அந்த அமைச்சர் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவி வெள்ளை சட்டை போட்டுக்கொண்டு நெற்றியில் பட்டை அடித்துக் கொண்டால் மக்கள் நம்பி விடுவார்களா?  அவருடைய பழைய கால வரலாறு மக்களுக்குத் தெரியாதா என்ன?  நானும் காவல் துறையில் பணியாற்றியிருக்கிறேன்.  இந்த அமைச்சரின் கடந்த காலம் மக்களுக்கு நன்கு தெரியும்.   சென்னையில் அவர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதும் எல்லோருக்கும் தெரியும்.  இன்றைக்கு நெற்றியில் சட்டை போட்டுக்கொண்டு ஆண்டவர் முன்பாக நின்று தரிசனம் செய்தால் உத்தமர் ஆகிவிட முடியாது.

 இந்து அறநிலையத்துறை அமைச்சர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசாமல் எந்த அர்த்தத்தில் டிஜிபியை குறை சொல்லி இருக்கிறோம் என்பதை உணர்ந்து கொண்டு அதை சரி செய்யும் போது இதே டிஜிபியை முதலில் பாராட்டுவது பிஜேபி ஆகத்தான் இருக்கும்.

 டிஜிபிக்கு சப்போர்ட் செய்வதற்கு முதலில் ஒரு தகுதி வேண்டும்.  டிஜிபிக்கு சப்போர்ட் செய்யறவங்க டிஜிபி பற்றி நல்லதாக பேசுறவங்க முதலில் சட்டத்தை மதிப்பவர்கள் ஆக இருக்கவேண்டும் சட்டத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.   ஆன்மீக வேஷம் போட்டுக்கொண்டு நான் இப்போது டிஜிபிக்கு சப்போர்ட் செய்கிறேன் என்றால் நீங்கள் எதற்காக சப்போர்ட் செய்கிறீர்கள் என்று தெரியும்.   

 டிஜிபியின் கடந்த காலம் வேறு மாதிரியாக இருக்கலாம்.  இப்போது அவர் இப்படி இருக்கிறார் என்றால் உண்மையாக அவரை பணிசெய்ய விடுகிறார்களா என்று சந்தேகமாக இருக்கிறது.  அவரை வைத்துக்கொண்டு வேறு ஆட்களை வைத்து வேலை செய்கிறார்களா என்று தான் தோன்றுகிறது.

22 எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. அந்த புகார் கொடுத்த 22 பேரும் திமுகவினர்.  திமுகவினர் புகார் கொடுத்தால் உடனே உள்ளே தூக்கி வைப்பதற்கு காவல்துறை எதற்கு? அதனால் பட்டய போட்டுக்கொண்டு குங்குமத்தை வைத்துக்கொண்டு நல்லவன் மாதிரி நடிக்க வேண்டாம்.  கடந்த காலம் எல்லோருக்கும் தெரியும் . நீங்கள் நேர்மையாக பேசினால் என்னுடைய பதிலும் நேர்மையாக இருக்கும்’’ என்றார்.