மறுக்கும் அமித்ஷா - மாற்றி யோசிக்கும் ஸ்டாலின்

 
ட்

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல் நடவடிக்கையே நீட் விலக்குதான் என்று தேர்தல் பிரச்சாரத்தில் முழக்கம் எழுப்பி வந்தார் ஸ்டாலின்.  ஆனால் ஆட்சிக்கு வந்ததும் நீட் விலக்கு  இல்லையே என்கிற  விமர்சனமும் எழுந்தது.  அந்த நிலையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழகத்தில் நீட் தேர்வால் தமிழகத்தில் இனி எந்த உயிரும் பறிபோக கூடாது என்கிற வகையில் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

 இந்த தீர்மானத்தை தமிழக ஆளுநருக்கு வழங்கப்பட்டது.  தமிழக ஆளுநர் இந்த தீர்மானத்தினை மத்திய அரசுக்கு அனுப்ப வில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார் திமுக எம்.பி.   டி. ஆர். பாலு.  சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றி பல மாதங்கள் ஆகியும் உள்துறை அமைச்சகத்திற்கு தமிழக ஆளுநர் அனுப்பவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அ

இதனால் இது குறித்து பேச  கடந்த பத்து நாட்களாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் முயற்சி செய்து வந்தனர்.   நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா நிலுவையில் இருப்பதற்கு ஆளுநர் தான் பொறுப்பு.  இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கச் சென்றார்கள்.   மூன்று முறை அனுமதி கேட்டும் மூன்று முறை அனுமதி ரத்து செய்யப்பட்டிருக்கிறது.  நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி மீண்டும் மீண்டும் மனு அளிக்கப்பட்டிருக்கிறது.

நீட்தேர்வு விலக்கு தொடர்பாக  சந்திக்க நேரம் கேட்ட  அனைத்துக் கட்சி தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திக்க மறுத்திருப்பது கடுமையான கன்டனத்துக்குரியது. இது 8 கோடி தமிழக மக்களை அவமதிக்கும் செயல். இதனால்தான் தமிழகம் #GoBackModi என்று கொதிக்கிறது என்கிறார் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி.

வ்ம்

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுக்க முற்படுகிறார்.    சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், முதல்வர் மு.க. ஸ்டாலின் நீட் தேர்வு என்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.  நீட் தேர்வால் கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் படிப்பது என்பது கேள்விக்குறியாகிறது.  நீட் தேர்வில் விலக்கு அளிக்கும் விவகாரம் தொடர்பாக தமிழக எம்பிக்கள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கடிதம் வழங்க அனுமதி கேட்டிருந்தனர்.  ஆனால் அமித்ஷா எம்பிக்களை சந்திக்க நேரம் ஒதுக்க வில்லை.  அதனால் அவரது அலுவலகத்தில் கடிதம் வழங்கப்பட்டது .

மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித்ஷாவின் செயல் கூட்டாட்சிக் எதிரானது என்று தெரிவித்திருக்கிறார்.   அவர் மேலும்,   பிளஸ்-2 மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர்களைச் சேர்த்து மருத்துவத்துறையில் நாட்டில் தமிழகம் முன்னோடியாக விளங்கி வருகிறது.  அடிப்படையில் மருத்துவ படிப்பில் மாணவர் சேர்க்கை என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.   போராட்டம் மூலமே உரிமைகள் பெறப்பட்டு இருக்கின்றன.  ஆகவே நீட் தேர்வுக்கு எதிரான அரசியல் போராட்டம் தொடரும்.   நீட் விவகாரத்தினால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராய நாளை மறுநாள் சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.