அமித்ஷா போட்ட சவால்
உத்தரபிரதேசத்தில் வரும் 10ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 10-ஆம் தேதி தொடங்கி மார்ச் 7ஆம் தேதி வரை ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது.
நாட்டிலேயே மிகப் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் ஏழு கட்ட தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் பாஜக ஆட்சியை தக்கவைக்க போராடி வருகிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க சமாஜ்வாடி கட்சியும் போராடி வருகின்றது. காங்கிரஸ் கட்சியும் கடும் சவால் விடுத்து வருகிறது. இதனால் உத்திரபிரதேச தேர்தல் நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. அதனால் அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா, தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய போது, பொய் சொல்வதற்கு அகிலேஷ் யாதவ் வெட்கப்படுவதில்லை. உண்மை என்று நம்புவார்கள் என கருதி பொய்களை உரத்த குரலில் பேசி வருகிறார் என்று சொன்னவர், மேலும் இதுதொடர்பாக, உத்தரப் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிறார் அகிலேஷ் . யோகி ஆதித்யநாத் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டிருக்கிறது .குற்றச்செயல்கள் 70 சதவிகிதம் வரை குறைந்துள்ளன . ஆனால் அகிலேஷ் ஆட்சிக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற குற்றச்செயல்களில் புள்ளிவிவரத்தை அளிக்க முடியுமா? இதை நான் அவருக்கு சவால் விடுகிறேன் என்று உறுதியாகச் சொன்னார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, பகுஜன் சமாஜ் கட்சி சாதி குறித்து பேசுகிறது. காங்கிரஸ் கட்சியை குடும்ப ஆட்சி பற்றி பேசுகிறது. அகிலேஷ் யாதவ் மாபியாகளின் ஆட்சி குறித்து பேசுகிறா. ர் ஆனால் பாஜக 5 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது வளர்ச்சி குறித்து மட்டுமே பேசி வருகிறது பாஜக. அதனால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரப்பிரதேச மாநிலம் ஆகும் என்று அழுத்தமாகச் சொன்னார்.