அதிமுக தேர்தலை ஒத்திவைக்கணும்- 85% பேர் வாக்களிப்பு

 
l l

அதிமுக உட்கட்சி தேர்தலை தடை செய்யக்கோரி அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

se

ஒற்றைத்தலைமை  வேண்டும் என்ற கட்சி உறுப்பினர்களுக்கு விரோதமாக, பொதுச்செயலாளர் அதிகாரத்தை அபரிக்கும் நோக்கில் ஓபிஎஸ் -இபிஎஸ் செயல்படுகின்றனர் அவர் தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.  அதே நேரம் ஓய்வு பெற்ற நீதிபதி மூலம் அதிமுக உட்கட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். இன்று பிற்பகல் 2.30க்குள் உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது. 

jj

இதற்கிடையில் ,   தனது டுவிட்டர் பக்கத்தில்,  கழக தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற வேண்டுமா? டிசம்பர் 07'ல் நடைபெறும் தேர்தல் ஒத்திவைக்க படவேண்டுமா? என்ற கேள்வியை கேட்டு,  ஆம் - இல்லை என்ற வாக்கெடுப்பை நடத்தியிருக்கிறார்.  இதில்,  85% பேர் ஆம் என்றும்,  15% பேர் இல்லை என்றும் வாக்களித்துள்ளனர்.