வேப்பிலை அடித்து ஆடிய அதிமுக எம்எல்ஏ

 
t

நூற்றாண்டு பழமை வாய்ந்த மாகாளியம்மன் கோவில் திருப்பூர் மாவட்டத்தில் அங்கேரி பாளையத்தில் அமைந்திருக்கிறது.  இக்கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் பொங்கல் திருவிழா விமர்சையாக நடந்து வருகிறது.   இந்த பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்வதை இப்பகுதி மக்கள் வழக்கமாக கடைபிடித்து வருகின்றனர்.

 இந்த ஆண்டு திருவிழா வான வேடிக்கையுடன் களைகட்டியது .  

v

அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் ஆராதனை செய்ய அதிக மக்கள் குவைந்தனர். ஏராளமானோர் தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். 

 அப்போது திருப்பூர் வடக்கு அதிமுக எம்எல்ஏ கே.என் விஜயகுமார் தீர்த்தக்குடம் எடுத்து வரும்போது கையில்  வேப்பிலை அடித்து ஆடிக் கொண்டே வந்தார்.  அவர் நடனம் ஆடுவதை பார்த்து குழந்தைகளும் பெண்களும் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த படியே அவர்களும் ஆடியபடியே வந்தனர்.