அதிமுக - பாஜக நிர்வாகிகளின் குழாய் சண்டை

 
pj

குழாயடி சண்டை போல் அதிமுக - பாஜக நிர்வாகிகள் இடையே சண்டை வந்து கூட்டணி கட்சியினருக்கிடையே இப்படியா என்று பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

b

 பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு  உட்பட்டது ராமபட்டினம்  ஊராட்சி. இங்கு  ஊராட்சி மன்றத் தலைவராக இருந்து வருபவர் பொன்னுசாமி.  அதிமுக நிர்வாகியான இவர் ஊராட்சிக்கு உட்பட்ட கோபாலபுரம் பகுதியில் வீட்டு இணைப்பிற்கான குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு வந்திருக்கிறார்.  அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாஜக நிர்வாகி ஜெகன் என்பவரின் வீட்டு குடிநீர் இணைப்புக்கு குழாய் பதிக்கும் பணி ஊராட்சி மன்ற செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றுக் கொண்டிருந்திருக்கிறது.

 குழாய் பதிப்பதற்காக குழி பறித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி,  குழியை ஆழமாகத் தோண்டி புதைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.  இதில் பாஜக நிர்வாகிகளுக்கும் பொன்னுசாமிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.  இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறி இருக்கிறது.  இதில்  பொன்னுச்சாமியின் தாக்கியதாக சொல்லப்படுகிறது .

ad

இதில் காயமடைந்த பொன்னுசாமி பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் தாக்கப்பட்ட விவகாரம் அறிந்து பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மருத்துவமனைக்கு விரைந்து சென்று பொன்னுச்சாமி சந்தித்து ஆறுதல் கூறியிருக்கிறார்.

 இதன்பின்னர் பொன்னுசாமி பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.  இந்த புகாரை அடுத்து இருதரப்பினர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் . 

ஒரே கூட்டணியில் இருக்கும்ன் அதிமுக -பாஜக நிர்வாகிகள் இடையே ஏற்பட்ட மோதல் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.