ஆப்செண்ட் அன்புமணி

 
aa

மாநிலங்களவையின் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 எம்.பிகளில் 17 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள். 

இந்த கூட்டத்தொடரில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மட்டும் பங்கேற்கவில்லை.   அன்புமணி ஆப்சென்ட் ஆனதால்,   #ஆப்செண்ட்_அன்புமணி என்ற ஹேஷ்டேக்கினை டுவிட்டரில் பரப்பி வருகின்றனர்.

ஒரு நாளு பாராளுமன்றம் போகாம சம்பளம் மட்டும் தெண்டத்துக்கு வாங்கிக்கிறியே... இந்த லட்சணத்துல சாதிப் பெருமை பேசறது உனக்கு வெக்கமா இல்லை ? என்று கடுமையாக தாக்கியிருக்கிறார் ஊடகவியலாளர் சவுக்கு சங்கர்.

ma

2014 -19 ஆண்டுகளில் மக்களவையில் தமிழ்நாட்டிலேயே  குறைவான வருகை பதிவை கொண்டவர் அன்புமணிதான் என்ற விமர்சனம் எழுந்திருக்கிறது.

18.11.2019 முதல் 13.12.2019 வரையிலும் நடந்த குளிர்கால கூட்டத்தொடரில் 20 நாளில் 5நாள் மட்டுமே பங்கேற்றுள்ளார் அன்புமணி.

34 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில்  2நாட்கள் மட்டுமே பங்கேற்றிருக்கிறார்.   10 நாட்கள் நடந்த மழைக்காலகூட்டத்தொடரில் ஒரு நாள் கூட பங்கேற்கவில்லை.  33 நாட்கள் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலும்  2 நாள் மட்டுமே பங்கேற்றுள்ளார்.   19 நாட்கள் நடந்த மழைக்கால கூட்டத்தொடரில் 5 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார் அன்புமணி.   மொத்தம் 116 நாட்களில்  14 நாட்கள் மட்டுமே பங்கேற்றுள்ளார் அன்புமணி.